அடிக்குறிப்பு/நிறைவுக் குறிப்பு

ஆவணத்தில் ஒரு அடிக்குறிப்பையோ நிறைவுக்குறிப்பையோ நுழைக்கிறது. குறிப்புக்கான நங்கூரம் இடஞ்சுட்டியின் நடப்பு நிலையில் நுழைக்கப்படுகிறது. நீங்கள் தானியக்க எண்ணிடல் அல்லது தனிப்பயன் குறியீட்டு இடையே தேர்ந்தெடுக்கலாம்.

பின்வருபவன அடிக்குறிப்புகள் மற்றும் நிறைவுக்குறிப்புகள் இரண்ட்ற்குமே செயல்படுத்தப்படுகிறது.

ஒரு பக்கத்தின் முடிவில் அடிக்குறிப்புகள் நுழைக்கப்படுகின்றன, நிறைவுக்குறிப்புகள் ஒரு ஆவணத்தின் முடிவில் நுழைக்கப்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

நுழை - அடிக்குறிப்பும் நிறைவுக்குறிப்பும் - அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பு ஐத் தேர்க

சூழல் பட்டியைத் திற - அடிக்குறிப்பு/இறுதிக்குறிப்பு ஐத் தேர் (நுழைத்த அடிக்குறிப்பு/இறுதிக்குறிப்பு)

நுழை கருவிப்பட்டையைத் திற, சொடுக்கு

படவுரு

அடிக்குறிப்பை நேரடியாக நுழை


எண்ணிடல்

அடிக்குறிப்புகளுக்கும் நிறைவுக்குறிப்புகளுக்கும் நீங்கள் பயன்படுத்தவிரும்பும் எண்ணிடல் வகையைத் தேர்க.

தன்னியக்கம்

தொடர்ச்சியான எண்களைத் தானகவே நீங்கள் நுழைக்கவிருக்கும் அடிக்குறிப்புகளில் அல்லது நிறைவுக்குறிப்புகளுக்கு அளிக்கிறது. தானியக்க எண்களுக்கான அமைவுகளை மாற்ற, கருவிகள் - அடிக்குறிப்புகளும் நிறைவுக்குறிப்புகளும் ஐத் தேர்ந்தெடுக.

வரியுரு

நடப்பு அடிக்குறிப்புக்கான ஒரு வரியுருவையோ குறியீட்டையோ வரையறுக்க இந்தத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒர் எழுத்துருவாகவோ எண்ணாகவோ இருக்கலாம். ஒரு சிறப்பு வரியுருவை அளிக்க, கீழுள்ள பொத்தானைச் சொடுக்கவும்.

தேர்ந்தெடு

சிறப்பு வரியுரு ஐ ஓர் அடிக்குறிப்பாகவோ நிறைவுக்குறிப்பாகவோ நுழைக்கிறது

வகை

ஓர் அடிக்குறிப்பையா நிறைவுக்குறிப்பையா நுழைப்பது என்பதைத் தேர்க. நிறைவுக்குறிப்பு எண்ணிடல் என்பது அடிக்குறிப்பு எண்ணிடலிருந்து தனித்திருப்பது.

அடிக்குறிப்பு

ஆவணத்தின் நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஒர் அடிக்குறிப்பு நங்கூரத்தை நுழைப்பதோடு, பக்கத்தின் கீழே ஒர் அடிக்குறிப்பைச் சேர்க்கிறது.

நிறைவுக்குறிப்பு

ஆவணத்தின் நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஒர் நிறைவுக்குறிப்பு நங்கூரத்தை நுழைப்பதோடு, பக்கத்தின் முடிவில் ஒர் நிறைவுக்குறிப்பைச் சேர்க்கிறது.

அடிக்குறிப்புகளுடன் பணிபுருவதற்கான சிறுதுப்புகள்