Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 5

5.9 வெளியீட்டு குறிப்புகள்

Red Hat Enterprise Linux 5.9 க்கான வெளியீட்டுக் குறிப்புகள்

பதிப்பு 9

சட்டஅறிக்கை

Copyright © 2012 Red Hat, Inc.

The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.

Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.

Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.

Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.

Java® is a registered trademark of Oracle and/or its affiliates.

XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.

MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.

All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701

சுருக்கம்

Red Hat Enterprise Linux சிறு வெளியீடுகள் என்பவை தனிப்பட்ட மேம்படுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் வழு நீக்கல்களின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 5.9 வெளியீட்டுக் குறிப்புகளில் இந்த வெளியீட்டுக்கான Red Hat Enterprise Linux 5 இயக்க முறைமை மற்றும் அத்துடனான பயன்பாடுகளில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது. இந்த சிறு வெளியீட்டிலான அனைத்து மாற்றங்களையும் பற்றிய விவரமான குறிப்பு தொழில்நுட்பக் குறிப்புகள் என்ற முகவரியில் காணக்கிடைக்கும்.
முன்னுரை
1. வன்பொருள் ஆதரவு
2. கர்னல்
3. சாதன இயக்கிகள்
3.1. சேமிப்பகம் இயக்கிகள்
3.2. நெட்வொர்க் இயக்கிகள்
3.3. மற்ற இயக்கிகள்
4. கோப்பு முறைமை மற்றும் சேமிப்பக நிர்வாகம்
5. சந்தா நிர்வாகம்
6. பாதுகாப்பு மற்றும் அங்கீகரிப்பு
7. கம்பைலர் மற்றும் கருவிகள்
8. க்ளஸ்டரிங்
9. மெய்நிகராக்கம்
10. பொதுவான புதுப்பித்தல்கள்
A. மறுபார்வை வரலாறு

முன்னுரை

இந்த வெளியீட்டுக் குறிப்புகள் Red Hat Enterprise Linux 5.9 இல் செயல்படுத்தப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களைப் பற்றி மேல்நிலைத் தகவலை வழங்குகிறது. Red Hat Enterprise Linux இன் 5.9 புதுப்பிப்புக்கான அனைத்து மாற்றங்களையும் பற்றிய விவரமான ஆவணமாக்கத்திற்கு தொழில்நுட்பக் குறிப்புகளைப் பார்க்கவும்.

பாடம் 1. வன்பொருள் ஆதரவு

mstflint ConnectX-3 சாதனங்களுக்கான ஆதரவு
Mellanox நிறுவன நிரல் பர்னிங் மற்றும் அறுதியிடல் கருவிகளை வழங்குகின்ற mstflint தொகுப்பில், இப்போது Mellanox ConnectX-3 சாதனங்களுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.

HP Smart Array கன்ட்ரோலர்கள் மற்றும் MegaRAID க்கான smartmontools ஆதரவு
SMART திறனுள்ள வன் வட்டு இயக்கிகளுக்கான கருவிகளை வழங்கும் smartmontools தொகுப்பு, HP Smart அர்ரே கன்ட்ரோலர்களுக்கான ஆதரவைச் சேர்க்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்பில் MegaRAID ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.

ipmitool delloem கட்டளைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
ipmitool பயன்பாட்டில் Dell-சார்ந்த delloem உப கட்டளையைச் சேர்க்கும் IPMI நீட்சியானது, பின்வரும் மேம்படுத்தல்களைக் கொண்டிருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது:
  • நீட்டிக்கப்பட்ட SD கார்டுகளைப் பற்றிய தகவலைக் காண்பிக்க பயனர்களை அனுமதிக்கும் ஒரு புதிய vFlash கட்டளை.
  • பேக்ப்ளேன் LED நிலையைக் காண்பிக்க பயனர்களை அனுமதிக்கும் ஒரு புதிய setled கட்டளை.
  • மேம்படுத்தப்பட்ட பிழை விளக்கங்கள்.
  • புதிய வன்பொருளுக்கான கூடுதல் ஆதரவு.
  • ipmitool கையேட்டுப் பக்கத்தில் ipmitool delloem இன் ஆவணமாக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

NetApp LUNகளுக்கான அமைவாக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது
இப்போது NetApp LUN உள்ளமைந்த அமைவாக்கம் tur பாதை சோதிப்பானை முன்னிருப்பாகப் பயன்படுத்துகிறது. பின்வரும் வன்பொருள் அட்டவணை அளவுருக்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன:
  • flush_on_last_del செயல்படுத்தப்பட்டுள்ளது,
  • dev_loss_tmo ஆனது 600 ஆக அமைக்கப்பட்டுள்ளது,
  • fast_io_fail_tmo ஆனது 5 ஆக அமைக்கப்பட்டுள்ளது,
  • மேலும் pg_init_retries ஆனது 50 ஆக அமைக்கப்பட்டுள்ளது.

பாடம் 2. கர்னல்

கணினி அழைப்பு தடமறிதல் புள்ளிகள்
கணினி அழைப்பு நிகழ்வுகளுக்கான பின்வரும் தடமறிதல் புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன:
  • sys_enter
  • sys_exit

HAVE_SYSCALL_TRACEPOINTS அமைவாக்க விருப்பம் செயல்படுத்தப்பட்டுள்ள கணினி கட்டமைப்புகளில் மட்டுமே கணினி அழைப்பு நுழைவு மற்றும் வெளியேற்ற தடமறிதல் புள்ளிகள் ஆதரிக்கப்படும்.

IPv6 UDP வன்பொருள் Checksum
Red Hat Enterprise Linux 5.9 இல் IPv6 இல் இயங்கும் UDP க்கான வன்பொருள் checksum ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.

முன் செயலாக்க வள வரம்புகள்
இப்போது பயனர்கள் /proc/<PID>/limits கோப்பின் மூலமாக (இந்தக் கோப்பு எழுத முடியாதது) ஒரு இயங்கும் செயலாக்கத்தின் வரம்புகளை செயல்மிகு முறையில் மாற்ற அனுமதிக்கும் வகையில் prlimit64() கணினி அழைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

pktgen இல் VLAN ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது
pktgen தொகுதிக்கூறில் VLAN ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது இப்போது pktgen தொகுதிக்கூறு 802.1Q குறிசேர்க்கப்பட்ட ஃபிரேம்களை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

/proc/<PID>/ க்கான அணுகலைத் தடுத்தல்
procfs இல் hidepid= மற்றும் gid= மவுன்ட் விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதனால் /proc/<PID>/ கோப்பகங்களுக்கான அணுகலுக்கு கட்டுப்பாடுகளை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.

DSCP புல கட்டுப்படுத்தல்
Red Hat Enterprise Linux 5.9 இல் netfilter தொகுதிக்கூறு இப்போது DSCP புலத்தைக் கட்டுப்படுத்தும் செயலை ஆதரிக்கும்.

பாடம் 3. சாதன இயக்கிகள்

3.1. சேமிப்பகம் இயக்கிகள்

  • mptfusion இயக்கி பதிப்பு 3.04.20 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அது பின்வரும் சாதன ID யை சேர்க்கிறது: SAS1068_820XELP.
  • QLogic ஃபைபர்-சேனல் HBAகளுக்கான qla2xxx ஆனது பதிப்பு 8.04.00.05.05.09-k ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • qla4xxx இயக்கியானது பதிப்பு 5.02.04.05.05.09-d0 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Emulex ஃபைபர்-சேனல் வழங்கி பஸ் அடாப்டர்களுக்கான lpfc இயக்கியானது பதிப்பு 8.2.0.128.3p ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ServerEngines BladeEngine 2 Open iSCSI சாதனங்களுக்கான be2iscsi இயக்கிகள் பதிப்பு 4.2.162.0r ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Broadcom NetXtreme II iSCSI க்கான bnx2i இயக்கியானது பதிப்பு 2.7.2.2 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ப்ரொகேட் BFA FC SCSI இயக்கி (bfa driver) இனி தொழில்நுட்ப முன்னோட்டமாகக் கருதப்படாது. Red Hat Enterprise Linux 5.9 இல், BFA இயக்கியானது முழுவதும் ஆதரிக்கப்படும். கூடுதலாக, ப்ரொகேட் bfa FC SCSI இயக்கியானது ப்பதிப்பு 3.0.23.0 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் பின்வரும் மேம்படுத்தல்கள் உட்பட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
    • ஒரு ஃபைபர்-சேனல் வழங்கியிலிருந்து சுழல் துவக்க நெறிமுறையை (லூப் இனிஷியலைசிங் ப்ரோட்டோகால்) (LIP) வழங்குவதற்கான ஆதரவு.
    • நீட்டிகப்பட்ட இணைப்பு சேவைகள் (எக்ஸ்டென்டட் லிங்க் சர்விசஸ்) (ELS) மற்றும் பொது டிரான்ஸ்போர்ட் (காமன் டிரான்ஸ்போர்ட்) (CT) ஃபைபர்-சேனல் பாஸ்த்ரூ கட்டளைகளுக்கான ஆதரவு.
    • IOCTL இடைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • bfa நிறுவன நிரலானது பதிப்பு 3.0.23.0. ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது
  • mpt2sas இயக்கியானது பதிப்பு 13.101.00.00 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் NUMA I/O ஆதரவு, வேகமான ஏற்றுதல் ஆதரவு மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த பிரான்டிங்குக்கான ஆதரவு ஆகியவை உள்ளன.
  • megaraid_sas இயக்கியானது பதிப்பு 00.00.06.15-rh ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Dell PowerEdge RAID கன்ட்ரோலர் (PERC) 9, LSI MegaRAID SAS 9360/9380 12GB/s கன்ட்ரோலர்களுக்கான ஆதரவும் பல MSI-X வெக்டார் மற்றும் பல பதிலளிப்பு வரிசை ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • Broadcom NetXtreme II BCM5706/5708/5709 வரிசை PCI/PCI-X ஜிகாபைட் ஈத்தர்நெட் பிணைய இடைமுக கார்டு (NIC) மற்றும் Broadcom NetXtreme II BCM57710/57711/57712/57800/57810/57840 வரிசை PCI-E 10 ஜிகாபைட் ஈத்தர்நெட் பிணைய இடைமுக கார்டு ஆகியவற்றுக்கான iscsiuio இயக்கியானது பதிப்பு 0.7.4.3 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் மற்ற பல மேம்படுத்தல்களுடன், VLAN மற்றும் ரௌட்டிங் ஆதரவும் அடங்கியுள்ளன.

3.2. நெட்வொர்க் இயக்கிகள்

  • Red Hat Enterprise Linux 5.9 உடன் வழங்கப்படும் கெர்னலில் ib_qib சாதன இயக்கிக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. ib_qib இயக்கியின் பதிப்பு QLogic இன் ib_ipath InfiniBand வழங்கி சேனல் அடாப்டர் (HCA) சாதன இயக்கியின் பதிப்பாக புதுப்பிக்கப்பட்டுள்ளது (மேலும் அது இடமாற்றப்பட்டுள்ளது), மேலும் சமீபத்திய PCI எக்ஸ்பிரஸ் QLE-வரிசை SDR, DDR மற்றும் QDR InfiniBand அடாப்டர்களுக்கான ஆதரவை வழங்குகிறது.
  • Solarflare இயக்கியானது (sfc) பதிப்பு 3.1 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் SFE4003 போர்டு மற்றும் TXC43128 PHY ஆகியவற்றுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • bnx2x நிறுவன நிரலானது பதிப்பு 7.2.51 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Broadcom 57710/57711/57712 சிப்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • bnx2x இயக்கியானது பதிப்பு 1.72.51-0+ ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Broadcom 578xx குடும்ப சிப்களுக்கான ஆதரவும் iSCSI ஆஃப்லோடுக்கான ஆதரவும் கூடுதல் PHYகளுக்கான ஆதரவும் (EEE உட்பட), OEM-சார்ந்த அம்சங்களுக்கான ஆதரவும் பல வழுக்களை கையாள்வதற்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • bnx2 இயக்கியானது பதிப்பு 2.2.1+ ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • cnic இயக்கியும் நிறுவன நிரலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் FCoE இணைத்தன்மைப் பிழை மீட்பு, புள்ளிவிவர ஆதரவு மற்றும் FCoE திறப்பாடுகள் விளம்பரம் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • Chelsio T3 குடும்ப பிணைய சாதனங்களுக்கான cxgb3 இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Chelsio Terminator4 10G யுனிஃபைடு வயர் பிணைய கன்ட்ரோலர்களுக்கான cxgb4 இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Chelsio T480-CR மற்றும் T440-LP-CR அடாப்டர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • cxgb4 நிறுவன நிரல் பிரதான பகுதி பதிப்பு 1.4.23.0 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • iw_cxgb3 இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • iw_cxgb4 இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • cxgb4i, cxgb3i மற்றும் libcxgbi இயக்கிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • netxen_nic இயக்கியானது பதிப்பு 4.0.79 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் மினிடம்ப் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • Broadcom Tigon3 ஈத்தர்நெட் சாதனங்களுக்கான tg3 இயக்கியானது பதிப்பு 3.123 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Intel 10 Gigabit PCI எக்ஸ்பிரஸ் பிணைய சாதனங்களுக்கான ixgbe இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதி பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் பின்வரும் மேம்படுத்தல்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
    • Intel ஈத்தர்நெட் 82599 10 ஜிகாபைட் ஈத்தர்நெட் கன்ட்ரோலருக்கான ஆதரவு.
    • Intel ஈத்தர்நெட் 82599 10 ஜிகாபைட் ஈத்தர்நெட் கன்ட்ரோலர் அடிப்படையிலமைந்த Quad Port 10 ஜிகாபைட் ஈத்தர்நெட் அடாப்டருக்கான ஆதரவு.
    • தொகுதிக்கூறு அளவுரு சேர்க்கப்பட்டுள்ளது (allow_unsupported_sfp), இதனால் சோதனை செய்யப்படாத மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறு வடிவ காரணி செருகக்கூடிய (SFP+) தொகுதிக்கூறுகள் அனுமதிக்கப்படும்.
  • ixgbevf இயக்கியானது அதன் பிரதான பகுதியின் சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் சமீபத்திய வன்பொருள் ஆதரவும் மேம்படுத்தல்களும் வழுநீக்கல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 100MB இணைப்பு வேகத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • igbvf இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதியின் பதிப்பு2.0.1-k-1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Intel ஜிகாபைட் ஈத்தர்நெட் அடாப்டர்களுக்கான igb இயக்கியானது அதன் பிரதான பகுதியின் சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Intel ஈத்தர்நெட் பிணைய இணைப்பு I210 மற்றும் Intel ஈத்தர்நெட் பிணைய இணைப்பு I211 ஆகியவற்றுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • Intel 82563/6/7, 82571/2/3/4/7/8/9 மற்றும் 82583 PCI-E வகை கன்ட்ரோலர்களுக்கான e1000e இயக்கியானது அதன் பிரதான பகுதியின் சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Intel ஈத்தர்நெட் பிணைய இணைப்பு I217-LM க்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • bna இயக்கி இனி தொழில்நுட்ப முன்னோட்டமாகக். கருதப்படாது. Red Hat Enterprise Linux 5.9 இல், BNA இயக்கியானது முழுவதும் ஆதரிக்கப்படும். கூடுதலாக, BNA இயக்கி மற்றும் சாதனநிரல் பதிப்பு 3.0.23.0 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • qlge இயக்கியானது பதிப்பு 1.00.00.30 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • HP NC-வரிசை QLogic 10 ஜிகாபைட் சேவையக அடாப்டர்களுக்கான qlcnic இயக்கியானது பதிப்பு 5.0.29 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ServerEngines BladeEngine2 10Gbps பிணைய சாதனங்களுக்கான be2net இயக்கியானது பதிப்பு 4.2.116r ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Cisco 10G ஈத்தர்நெட் சாதனங்களுக்கான enic இயக்கியானது பதிப்பு 2.1.1.35+ ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

3.3. மற்ற இயக்கிகள்

  • mlx4 ib மற்றும் net இயக்கிகள் அவற்றின் பிரதான பகுதியின் சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, mlx4 இயக்கியில் EEH பிழை மீட்டலுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • mlx4_en இயக்கியானது பதிப்பு 1.5.3 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • mlx4_core இயக்கியானது பதிப்பு 1.0-ofed1.5.4 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ALSA HDA ஆடியோ இயக்கியானது புதிய சிப்செட்டுகள் மற்றும் HDA ஆடியோ கோடெக்குகளை செயல்படுத்துவதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான ஆதரவைக் கொண்டுள்ளதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • IPMI இயகியானது அதன் சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது..

பாடம் 4. கோப்பு முறைமை மற்றும் சேமிப்பக நிர்வாகம்

dmraid க்கான FIPS பயன்முறை ஆதரவு
Red Hat Enterprise Linux 5.9 இல்dmraid ரூட் சாதனங்களுடன் FIPS பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது FIPS checksum சோதிக்கப்படும் முன்பு ஒரு dmraid சாதனம் செயல்படுத்தப்படுகிறது.

பாடம் 5. சந்தா நிர்வாகம்

RHN கிளாஸிக்கிலிருந்து சந்தா சொத்து நிர்வாகிக்கு இடப்பெயர்த்தல்
Red Hat Enterprise Linux 5.9 இல், பயனர்கள் RHN கிளாஸிக்கிலிருந்து Red Hat சந்தா சொத்து நிர்வாகிக்கு (SAM) இடப்பெயர்க்க முடியும். கிளையன்ட் கணினிகளில் சந்தாக்களையும் மென்பொருள் புதுப்பிப்புகளையும் கையாளுவதற்கான பதிலியாக SAM செயல்படுகிறது. இடப்பெயர்ப்பு செயலாக்கங்கள் பற்றிய மேலும் தகவலுக்கு சந்தா நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

வெளிப்புற சேவையகங்களில் பதிவு செய்தல்
இப்போது சந்தா நிர்வாகியில், ஒரு கணினியைப் பதிவு செய்யும் போது ஒரு தொலைநிலை சேவையகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆதரவும் உள்ளது. சந்தா நிர்வாகி இடைமுகத்தில் பதிவு செய்தல் செயலாக்கத்தின் போது பதிவு செய்ய வேண்டிய சேவையகத்தின் URL, மற்றும் முனையம் மற்றும் முன்னொட்டு ஆகியவற்றைத் தேர்வு செய்வதற்கான ஒரு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கட்டளை வரியில் பதிவு செய்யும் போது, பதிவு செய்ய வேண்டிய சேவையகத்தைக் குறிப்பிட --serverurl விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, சந்தா நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

முதல்பூட் கணினி பதிவு
Red Hat Enterprise Linux 5.9 இல் firstboot கணினி பதிவு செய்தலின் போது, இப்போது Red Hat சந்தா நிர்வாகத்திற்கு பதிவு செய்தல் என்பது முன்னிருப்பு விருப்பமாக உள்ளது.

சந்தா நிர்வாகி gpgcheck நடத்தை
இப்போது சந்தா நிர்வாகியில் அது நிர்வகிக்கும் தொகுப்பதிவகங்களில் காலியான gpgkey ஐக் கொண்டுள்ள தொகுப்பதிவகங்களுக்கான gpgcheck ஐ முடக்கப்படும். தொகுப்பதிவகத்தை மீண்டும் செயல்படுத்த, GPG விசைகளைப் பதிவேற்றவும், அதே சமயம் உங்கள் தனிப்பயன் உள்ளடக்க வரையறையில் சரியான URL சேர்க்கப்பட்டுள்ளதா எனவும் பார்த்துக்கொள்ளவும்.

சேவையக தரப்பிலான நீக்கங்கள்
இப்போது வாடிக்கையாளர் வலைவாசலில் இருந்து கணினி விவரத் தொகுப்புகளை நீக்கும் போது அவை பதிவு நீக்கபப்டுகின்றன, ஆகவே அவை சான்றிதழ் அடிப்படையிலான RHN கொண்டு செக் இன் செய்யாது.

விரும்பப்படும் சேவை நிலைகள்
இப்போது ஒரு கணினியை விரும்பும் ஒரு சேவை நிலையுடன் சம்பந்தப்படுத்த சந்தா நிர்வாகி அனுமதிக்கிறது, இந்த சேவை நிலையானது தானியக்க சந்தா மற்றும் ஹீலிங் தருக்கம் பாதிக்கப்படுகிறது. சேவை நிலைகளைப் பற்றிய மேலும் தகவலுக்கு, சந்தா நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

ஒரு குறிப்பிட்ட சிறு வெளியீட்டுக்கான புதுப்பிப்புகளைக் கட்டுப்படுத்துதல்
இப்போது சந்தா நிர்வாகியானது, ஒரு பயனர் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டைத் (எடுத்துக்காட்டுக்கு Red Hat Enterprise Linux 5.8) தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது, இதனால் கணினி அந்த குறிப்பிட்ட வெளியீட்டைக் கொண்டே இயங்கும் படி கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த புதுப்பிப்புக்கு முன்பாக, பிந்தைய சிறு வெளியீட்டின் (எடுத்துக்காட்டுக்கு, Red Hat Enterprise Linux 5.9) பகுதியாக புதிய தொகுப்புகள் கிடைக்கும்பட்சத்தில் தொகுப்பு புதுப்பிப்புகளைக் கட்டுப்படுத்த வழியில்லாதிருந்தது.

GUI இலான பயன்படுதன்மை மாற்றங்கள்
வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் சந்தா நிர்வாகியின் வரைவியல் பயனர் இடைமுகம் பல மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாடம் 6. பாதுகாப்பு மற்றும் அங்கீகரிப்பு

pam_cracklib க்கான கூடுதல் கடவுச்சொல் சோதனைகள்
Red Hat Enterprise Linux 5.9 இல் pam_cracklib தொகுதிக்கூறுக்கான maxclassrepeat மற்றும் gecoscheck விருப்பங்களுக்கான பின்புல ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விருப்பங்கள் பயனர் உள்ளிடும் புதிய கடவுச்சொற்களின் பண்புகளை சோதித்து அவை குறிப்பிடப்பட்ட வரம்புகளுக்குள் அமையாவிட்டால் அவற்றை நிராகரிக்க உதவுகின்றன. maxclassrepeat விருப்பமானது ஒரே அழுத்து வகையைச் (சிற்றெழுத்து, பேரெழுத்து, எண்கள் மற்றும் பிற எழுத்துகள்) சேர்ந்த அடுத்தடுத்த எழுத்துகளின் அதிகபட்ச எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. gecoscheck விருப்பமானது புதிதாக உள்ளிடப்பட்ட கடவுச்சொல் (இடைவெளியால் பிரிக்கப்பட்ட சரம்) கடவுச்சொல்லை உள்ளிடும் பயனருக்கான /etc/passwd புலத்தில் உள்ள GECOS இலிருக்கும் ஒன்றா என சோதிக்கிறது. மேலும் தகவலுக்கு pam_cracklib(8) man பக்கத்தைப் பார்க்கவும்.

M2Crypto க்கான IPv6 ஆதரவு
Python ஸ்கிரிப்ட்டுகளில் இருந்து OpenSSL சார்புகளை அழைக்கும் தரவகத்தை வழங்குகின்ற m2crypto தொகுப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இப்போது அது HTTPS செயல்படுத்தலம்சமானது IPv4 மற்றும் IPv6 ஆகிய இரன்டிலும் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, M2Crypto.SSL.Connection பொருளுக்கு இப்போது IPv6 சாக்கெட்டுகளை உருவாக்கும்படி அறிவுறுத்த முடியும்.

சுடூயர் உள்ளீடுகளின் லுக்கப்களில் பொருத்தங்களை அங்கீகரித்த முறையில் நடத்துதல்
சூடூயர்கள் உள்ளீடுகளுக்காக sudo பயன்பாடு /etc/nsswitch.conf கோப்பிலிருந்து ஆலோசனையைப் பெற முடியும் மேலும் கோப்புகள் அல்லது LDAP இல் அவற்றைத் தேடிப்பார்க்க முடியும். முன்னர், சூடூயர் உள்ளீடுகளில் முதல் தரவுத்தளத்தில் ஒரு பொருத்தம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் கூட, பிற தரவுத்தளங்களில் (கோப்புகள் உட்பட) தேடுதல் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். Red Hat Enterprise Linux 5.9 இல், /etc/nsswitch.conf கோப்பில் பயனர்கள் ஒரு சூடூயர் உள்ளீட்டின் பொருத்தம் உள்ள எந்த தரவுத்தளத்திற்குப் பிறகு தேடுதலை நிறுத்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடும் வசதியை வழங்கும் விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற தரவுத்தளங்களில் தேட வேண்டிய அவசியம் இல்லாது போகிறது; இதனால் பெரிய சூழல்களில் சூடூயர்கள் உள்ளீட்டு தேடல் செயல் செயல்திறன் மிக்கதாகிறது. இந்த அம்சம் முன்னிருப்பாக செயல்பாட்டில் இருக்காது, தேர்ந்தெடுத்த தரவுத்தளத்திற்குப் பிறகு [SUCCESS=return] சரத்தைச் சரத்தைச் சேர்த்து அமைவாக்கம் செய்தால் மட்டுமே செயல்படுத்தப்படும். இந்த சரத்திற்கு முன்பு குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தரவுத்தளத்தில் ஒரு பொருத்தம் கண்டுபிடிக்கப்பட்டதும், வேறு தரவுத்தளத்தில் தேடப்படுவதில்லை.

பாடம் 7. கம்பைலர் மற்றும் கருவிகள்

SystemTap
SystemTap என்பது ஒரு தடமறியும் மற்றும் ஆய்ந்தறியும் கருவியாகும், அதைக் கொண்டு பயனர் இயக்க முறைமையின் (குறிப்பாக கெர்னல்) செயல்பாடுகளை தெளிவாக கண்காணிக்கலாம். அதுnetstat, ps, top மற்றும் iostat; ஆகிய கருவிகளின் வெளியீட்டைப் போன்றதேயான முடிவுகளை வழங்கும், இருப்பினும் SystemTap இல் சேகரிக்கப்பட்ட தகவல்களில் கூடுதல் வடித்தல் மற்றும் பகுப்பாய்வுக்கான விருப்பங்கள் உள்ளன.

Red Hat Enterprise Linux 5.9 இல் உள்ள SystemTap இன் பதிப்பு 1.8 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் பின்வரும் அம்சங்களும் மேம்படுத்தல்களும் கிடைக்கின்றன:
  • இப்போது SystemTap இயக்க நேரமானது (staprun) ஸ்கிரிப்ட்டுகளில் இருந்து கிடைக்கும் குறைந்த த்ரூபுட் வெளியீட்டுக்கான குறைந்த நிகழ்வெண் கொண்ட போலுக்கான எழுதலை அனுமதிப்பதற்காக-T நேரக்கடப்பு விருப்பத்தை ஏற்கும்.
  • SystemTap ஆல் வரவழைக்கப்படும் போது, kbuild $PATH சூழல் இப்போது நேர்த்தியானதாக இருக்கும்.
  • இப்போது printf வடிவமைப்புகள், நான் - எஸ்கேப்பிங் எழுத்துகளுக்கான %#c கட்டுப்பாட்டு அளவுருக்களைப் பயன்படுத்தும் திறன் கொண்டவையாகியுள்ளன.
  • இப்போது Pretty-printed பிட் புலங்கள் முழு எண்களைப் பயன்படுத்துகின்றன; எழுத்துகள் இப்போது அச்சிடுதலுக்கு எஸ்கேப்டு வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன.
  • SystemTap கம்பைல்-சேவையகம் மற்றும் கிளையன்ட் ஆகியவை இப்போது IPv6 பிணையங்களை ஆதரிக்கும்.
  • SystemTap தொகுதிக்கூறுகள் இப்போது சிறியவையாக உள்ளதால் கம்பைலிங் செயலும் வேகமாக நிகழும். தொகுதிக்கூறுகளின் வழுநீக்கல் தகவல் இப்போது முன்னிருப்பாக மறைக்கப்பட்டிருக்கும்.
  • இப்போது @var தொடரியலானது uprobe மற்றும் kprobe ஹேன்டிலர்களிலுள்ள (செயலாக்கம், கெர்னல், தொகுதிக்கூறு) DWARF மாறிகளை அணுகுவதற்கான மாற்று மொழித் தொடரியலாகும்.
  • இப்போது SystemTap ஸ்கிரிப்ட் ட்ரேன்ஸ்லேட்டர் இயக்கி (stap) பின்வரும் வள வரம்பு விருப்பங்களை வழங்குகிறது:
    --rlimit-as=NUM
    --rlimit-cpu=NUM
    --rlimit-nproc=NUM
    --rlimit-stack=NUM
    --rlimit-fsize=NUM
    
  • இப்போது SystemTap கம்பைல்-சேவையகம் ஒரே சமயத்திலான பல திருத்தங்களை ஆதரிக்கிறது.
  • 1.8 வெளியீட்டில் பின்வரும் டேப்செட் செயலம்சங்கள் வழக்கழிந்துவிட்டன, 1.9 வெளியீட்டில் அவை நீக்கப்படும்:
    daddr_to_string()
    
  • இப்போது SystemTap டேப்செட்டுகளால் சேர்க்கப்பட்ட C மேற்குறிப்புகளுடனான மோதலைத் தவிர்ப்பதற்காக உள் மாறிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • இப்போது உட்பொதிக்கப்பட்ட-C சார்புகளில், THIS->* குறிப்புகளுக்குப் பதிலாக புதிதாக வரையறுக்கப்பட்ட மேக்ரோ STAP_ARG_* பயன்படுத்தப்பட வேண்டும்.

பாடம் 8. க்ளஸ்டரிங்

IBM iPDU ஃபென்ஸ் சாதனத்திற்கான ஆதரவு
Red Hat Enterprise Linux 5.9 இல் IBM iPDU ஃபென்ஸ் சாதனத்திற்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஃபென்ஸ் சாதனத்தின் அளவுருக்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, க்ளஸ்டர் நிர்வாக வழிகாட்டியைக் காணவும்.

DLM ஹாஷ் டேபிள் சைஸ் டியூனிங்
டிஸ்ட்ரிபியூட்டட் லாக் மேனேஜரில் (DLM) இப்போது /etc/sysconfig/cman கோப்பிலிருந்து DLM ஹாஷ் டேபிள் அளவுகளை டியூனிங் செய்ய முடியும். /etc/sysconfig/cman கோப்பில் பின்வரும் அளவுருக்களை அமைக்கலாம்:
DLM_LKBTBL_SIZE=<size_of_table>
DLM_RSBTBL_SIZE=<size_of_table>
DLM_DIRTBL_SIZE=<size_of_table>

அது முறையே பின்வரும் கோப்புகளில் உள்ள மதிப்புகளை மாற்றியமைக்கும்:
/sys/kernel/config/dlm/cluster/lkbtbl_size
/sys/kernel/config/dlm/cluster/rsbtbl_size
/sys/kernel/config/dlm/cluster/dirtbl_size

பாடம் 9. மெய்நிகராக்கம்

Microsoft Hyper-V இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன, அத்துடன் அவற்றுக்கான விருந்தினர் நிறுவல் ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது
ஒருங்கிணைக்கப்பட்ட Red Hat Enterprise Linux விருந்தினர் நிறுவல் மற்றும் Microsoft Hyper-V இலான Red Hat Enterprise Linux 5.9 க்கான Hyper-V para-மெய்நிகராக்கம் செய்யப்பட்ட சாதன ஆதரவு, பயனர் Red Hat Enterprise Linux 5.9 ஐ Microsoft Hyper-V ஹைப்பர்வைசர்களின் மேல் விருந்தினராக இயக்க அனுமதிக்கிறது. Red Hat Enterprise Linux 5.9 உடன் வழங்கப்படும் கெர்னலில் பின்வரும் Hyper-V இயக்கிகள் மற்றும் ஒரு கடிகார மூலம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன:
  • ஒரு பிணைய இயக்கி (hv_netvsc)
  • ஒரு சேமிப்பக இயக்கி (hv_storvsc)
  • ஒரு HID-நிரப்பு மவுஸ் இயக்கி (hid_hyperv)
  • ஒரு VMbus இயக்கி (hv_vmbus)
  • ஒரு util இயக்கி (hv_util)
  • ஒரு கடிகார மூலம் (i386: hyperv_clocksource, AMD64/Intel 64: HYPER-V டைமர்)

Red Hat Enterprise Linux 5.9 இல் ஒரு விருந்தினர் Hyper-V விசை-மதிப்பு சோடி (KVP) டெமானும் (hypervkvpd) சேர்க்கப்பட்டுள்ளது, அது விருந்தினர் IP, FQDN, OS பெயர் மற்றும் OS வெளியீட்டு எண் போன்ற அடிப்படைத் தகவல்களை VMbus வழியாக வழங்கிக்கு அனுப்பும்.

பாடம் 10. பொதுவான புதுப்பித்தல்கள்

புதுப்பிக்கப்பட்ட samba3x தொகுப்புகள்
Red Hat Enterprise Linux 5.9 இல் மறுஅடிப்படையாக்கிய samba3x தொகுப்புகள் உள்ளன, அவற்றில் பல வழுநீக்கல்களும் சில மேம்படுத்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதில் SMB2 நெறிமுறைக்காக சேர்க்கப்பட்டுள்ள ஆதரவு என்பது முக்கியமானதாகும். /etc/samba/smb.conf கோப்பின் [global] பிரிவில் உள்ள பின்பவரும் அளவுருவைக் கொண்டு இந்த SMB2 ஆதரவைச் செயல்படுத்தலாம்:
max protocol = SMB2

எச்சரிக்கை

புதுப்பிக்கப்பட்ட samba3x தொகுப்புகள் ID மேப்பிங் அமைவாக்கம் செய்யப்படும் விதத்தையும் மாற்றுகின்றன. பயனர்கள் தங்கள் முன்பே உள்ள Samba அமைவாக்கக் கோப்புகளை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு Samba 3.6.0 க்கான வெளியீட்டுக் குறிப்புகளைக் காணவும்.

OpenJDK 7
Red Hat Enterprise Linux 5.9 இல் OpenJDK 6 க்கு மாற்றாக OpenJDK 7 க்கான முழு ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. java-1.7.0-openjdk தொகுப்புகள் OpenJDK 7 Java இயக்க நேர சூழலையும் OpenJDK 7 Java மென்பொருள் உருவாக்க கருவித்தொகுப்பையும் வழங்குகின்றன. OpenJDK 7 இல் JVM இல் இயங்கக்கூடிய செயல்மிகு முறையில் தட்டச்சு செய்யப்படும் மொழிகளுக்கான ஆதரவுக்குரிய நீட்சிகளும் வகை ஏற்றியும் ஒருங்குறி 6.0 க்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளன, அத்துடன் அதில் புதுப்பிக்கப்பட்ட I/O மற்றும் நெட்வொர்க்கிங் APIகளும் சேர்க்கப்பட்டுள்ளன. Red Hat Enterprise Linux 6 இலும் OpenJDK 7 கிடைக்கும்.

புதிய Java 7 தொகுப்புகள்
இப்போது Red Hat Enterprise Linux 5.9 இல் java-1.7.0-ibm மற்றும் java-1.7.0-oracle தொகுப்புகள் கிடைக்கும்.

புதிய libitm தொகுப்பு
libitm இல் GNU பரிவர்த்தனை நினைவக தரவகம் உள்ளது, அது சில தொடரிழைகள் பகிர்ந்துள்ள நினைவகத்திற்கான அணுகலுக்கான பரிவர்த்தனை ரீதியான ஆதரவை வழங்குகிறது.

Rsyslog பெரிய பதிப்பு 5 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது
Red Hat Enterprise Linux 5.9 இல் ஒரு புதிய rsyslog5 தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது, அது rsyslog ஐ பெரிய பதிப்பு 5 ஆக புதுப்பிக்கிறது.

முக்கியம்

rsyslog5 தொகுப்பானது இப்போதுள்ள rsyslog தொகுப்புக்கான பதிலீடாகும், இது Red Hat Enterprise Linux 5 இல் rsyslog இன் பெரிய பதிப்பு 3 ஐ வழங்குகிறது. rsyslog5 தொகுப்பை நிறுவ, முதலில் rsyslog தொகுப்பை நிறுவ வேண்டும்.

rsyslog இன் பெரிய பதிப்பு 5 க்கான மேம்படுத்தலில் பல மேம்படுத்தல்களும் பல வழுநீக்கல்களும் உள்ளன. பின்வருபவை முக்கியமான மாற்றங்கள்:
  • $HUPisRestart டைரக்டிவ் அகற்றப்பட்டுவிட்டது, இனி அது ஆதரிக்கப்படாது. ஆகவே இனி மறுதொடக்க வகை HUP செயலாக்கம் கிடைக்காது. இப்போது, SIGHUP சமிக்ஞை பெறப்பட்டதும், பதிவு சுழற்சியை ஆதரிப்பதற்காக வெளியீடுகள் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதிவுக் கோப்புகளே) மீண்டும் திறக்கப்படுகின்றன.
  • ஸ்பூல் கோப்புகளின் வடிவம் (எடுத்துக்காட்டுக்கு, வட்டு-உதவி கொண்ட வரிசைகள்) மாறிவிட்டன. புதிய வடிவத்திற்கு மாற, ஸ்பூல் கோப்புகளை காலி செய்யவும், எடுத்துக்காட்டுக்கு rsyslogd ஐ இயக்க நிறுத்தம் செய்து இதைச் செய்யலாம். பிறகு, Rsyslog மேம்படுத்தலைத் தொடரவும், பிறகு rsyslogd ஐ மீண்டும் தொடங்கவும். மேம்படுத்தியபிறகு, தானாகவே புதிய வடிவம் பயன்படுத்தப்படும்.
  • rsyslogd டெமான் (-d விருப்பத்தைப் பயன்படுத்தி) வழுநீக்கல் பயன்முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் போது, அது முன்புலத்தில் இயங்கியது. இது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது, அது இப்போது எதிர்பார்த்தபடி பின்புலத்தில் இயங்கும். பின்புலத்தில் rsyslogd தானாகத் தொடங்கப்படுவதைத் தடுக்க -n விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.

Rsyslog இன் இந்தப் பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.rsyslog.com/doc/v5compatibility.html ஐப் பார்க்கவும்.

மறுபார்வை வரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1-0.2.2Tue Dec 11 2012Shantha Kumar
Initial Build of RHEL5.9 Release Notes for Tamil
மீள்பார்வை 1-0.2.1Tue Dec 11 2012Chester Cheng
Translation files synchronised with XML sources 1-0.2
மீள்பார்வை 1-0.2Tue Dec 11 2012Martin Prpič
Red Hat Enterprise Linux 5.9 வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு
மீள்பார்வை 1-0.1Mon Sep 24 2012Martin Prpič
Translation files synchronised with XML sources 1-0
மீள்பார்வை 1-0Thu Sep 20 2012Martin Prpič
Red Hat Enterprise Linux 5.9 பீட்டா வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு