Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 6

Release Notes

Red Hat Enterprise Linux 6.4 க்கான வெளியீட்டு குறிப்புகள்

பதிப்பு 4


சட்டஅறிக்கை

Copyright © 2012 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
 RaleighNC 27606-2072 USA
 Phone: +1 919 754 3700
 Phone: 888 733 4281
 Fax: +1 919 754 3701

சுருக்கம்
இந்த வெளியீட்டுக் குறிப்புகள் Red Hat Enterprise Linux 6.4 இல் செயல்படுத்தப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களைப் பற்றி மேல்நிலைத் தகவலை வழங்குகிறது. Red Hat Enterprise Linux இன் 6.4 புதுப்பிப்புக்கான அனைத்து மாற்றங்களையும் பற்றிய விவரமான ஆவணமாக்கத்திற்கு தொழில்நுட்பக் குறிப்புகளைப் பார்க்கவும்.

வழுக்கல்முன்னுரை
1. நிறுவல்
2. கெர்னல்
3. சாதன இயக்கிகள்
4. பிணையமாக்கல்
5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை
6. பாதுகாப்பு
7. உரிமைகள்
8. மெய்நிகராக்கம்
8.1. KVM
8.2. ஹைப்பர்-V
8.3. VMware ESX
9. க்ளஸ்டரிங்
10. சேமிப்பகம்
11. கம்பைலர் மற்றும் கருவிகள்
12. பொதுவான புதுப்பிப்புகள்
A. மறுபார்வை வரலாறு

வழுக்கல்முன்னுரை

Red Hat Enterprise Linux இன் சிறு வெளியீடுகள் பல தனித்தனி மேம்பாடுகள், பாதுகாப்பு மற்றும் வழுநீக்கல் தொகுப்புகளின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 6.4 வெளியீட்டுக் குறிப்புகளானது Red Hat Enterprise Linux 6 இயக்க முறைமை மற்றும் அதன் உடன் கிடைக்கும் பயன்பாடுகளில் இந்த சிறு வெளியீட்டில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது. இந்த சிறு வெளியீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் (அதாவது தீர்க்கப்பட்ட வழுக்கள், சேர்க்கப்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் கண்டறியப்பட்ட தெரிந்த சிக்கல்கள்) தொழில்நுட்பக் குறிப்புகளில் கிடைக்கும். மேலும் இந்தத் தொழில்நுட்பக் குறிப்புகளில் தற்போது கிடைக்கும் தொழில்நுட்ப மாதிரிகள் மற்றும் அவற்றை வழங்கும் தொகுப்புகள் பற்றிய முழு பட்டியலும் உள்ளது.

முக்கியம்

இங்கு ஆன்லைனில் உள்ள ஆன்லைன் Red Hat Enterprise Linux 6.4 வெளியீட்டுக் குறிப்புகளையே வரையறைக்கான புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகக் கருத வேண்டும். வெளியீடு குறித்த கேள்விகள் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் Red Hat Enterprise Linux பதிப்புக்குரிய ஆன்லைன் வெளியீடு மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளைக் காணுமாறூ பரிந்துரைக்கிறோம்.
Red Hat Enterprise Linux வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி உங்களுக்கு மேலும் தகவல் வேண்டுமானால் https://access.redhat.com/support/policy/updates/errata/ ஐப் பார்க்கவும்.

பாடம் 1. நிறுவல்

Kickstart கோப்பில் FCoE ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 ஐ நிறுவ kickstart கோப்பைப் பயன்படுத்தும் போது, புதிய fcoe kickstart விருப்பத்தைக் கொண்டு நீங்கள் மேம்பட்ட வட்டு இயக்கி (EDD) சேவைகளால் கண்டுபிடிக்கப்படும் சாதனங்களுடன் கூடுதலாக ஈத்தர்நெட்டிலான ஃபைபர் சேனல் (FCoE) சாதனங்களில் எவை தானாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம். மேலும் தகவலுக்கு Red Hat Enterprise Linux 6 நிறுவல் வழிகாட்டியின் Kickstart விருப்பங்கள் பிரிவைப் பார்க்கவும்.

VLAN இல் நிறுவல்

Red Hat Enterprise Linux 6.4 இல், vlanid= boot விருப்பம் மற்றும் --vlanid= kickstart விருப்பம் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிணைய சாதனத்திற்கு மெய்நிகர் LAN ID ஐ (802.1q tag) அமைக்க முடியும். இந்த விருப்பங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதன் மூலம், கணினியின் நிறுவல் ஒரு VLAN இல் மேற்கொள்ளப்பட முடியும்.

பிணைப்பாக்கத்தை அமைவாக்கம் செய்தல்

இப்போது நிறுவல் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக பிணைப்பாக்கத்தை அமைவாக்கம் செய்ய bond boot விருப்பம் மற்றும் --bondslaves மற்றும் --bondopts kickstart விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பிணைப்பாக்கத்தை அமைவாக்கம் செய்வது எப்படி என்பது பற்றிய மேலும் தகவலுக்கு, Red Hat Enterprise Linux 6 நிறுவல் வழிகாட்டியின் பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்: Kickstart விருப்பங்கள் பிரிவு மற்றும் Boot விருப்பங்கள் பிரிவு.

பாடம் 2. கெர்னல்

ஃபைபர் சேனல் நெறிமுறை: முனை வாரியான தரவு இசைவு சோதித்தல்

Red Hat Enterprise Linux 6.4 இல் முனைவாரியான (E2E) தரவு இசைவு சோதித்தலுக்கான மேம்படுத்தப்பட்ட T10 DIF SCSI தரநிலையின் zFCP-சார் பகுதியை செயல்படுத்தியுள்ளதன் மூலம் வழங்கி அடாப்டர் மற்றும் சேமிப்பு சேவையகத்திற்கிடையிலான தரவு ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

IBM சிஸ்டம் z க்கான பிளாஷ் எக்ஸ்பிரஸ் ஆதரவு

IBM சிஸ்டம் z க்கான சேமிப்பக-வகை நினைவகம் (SCM) என்பது சேமிப்பகம் மற்றும் நினைவகம் இரண்டுக்குமான பண்புகளைக் கொண்டுள்ள தரவு சேமிப்பக சாதனங்களின் ஒரு பிரிவாகும். சிஸ்டம் z க்கான SCM இப்போது பிளாஷ் எக்ஸ்பிரஸ் நினைவகத்தை ஆதரிக்கிறது. நீட்டிக்கப்பட்ட ஒத்திசைவற்ற தரவு நகர்த்தி (EADM) துணை சேனல்களின் மூலம் SCM அதிகப்படிகள் அணுகப்பட முடியும். ஒவ்வொரு அதிகரிப்புப் படியும் ஒரு தொகுப்பு சாதனத்தால் குறிக்கப்படுகிறது. இந்த அம்சம் பக்கமிடல் வேகத்தையும் தற்காலிக சேமிப்பகத்திற்கான அணுகல் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, எடுத்துக்காட்டாக தரவு கிடங்ககப்படுத்தலுக்கு (டேட்டா வேர்ஹவுசிங்) இது உதவுகிறது.

திறந்தநிலை vSwitch கெர்னல் தொகுதிக்கூறு

Red Hat Enterprise Linux 6.4 இல் Open vSwitch கெர்னல் தொகுதிக்கூறு சேர்க்கப்பட்டுள்ளது அது Red Hat இன் அடுக்கமைவு கொண்ட தயாரிப்பு வழங்கல்களை செயல்படுத்துகிறது. திறந்தநிலை vSwitch ஆனது உடன் அமைந்த பயனர் வெளி பயன்பாடுகளைக் கொண்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே ஆதரிக்கப்படும். தேவையான இந்த பயனர் வெளி பயன்பாடுகள் இன்றி, திறந்தநிலை vSwitch இயங்காது மற்றும் பயன்படுத்த செயல்படுத்தப்பட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தகவலுக்கு பின்வரும் அறிவுக்களஞ்சியக் கட்டுரையைக் காணவும்: https://access.redhat.com/knowledge/articles/270223.

பூட் செய்யப்பட்ட கணினிகள் மற்றும் டம்ப் செய்யப்பட்ட கணினிகள் ஒப்பீடு

இந்த அம்சமானது பட இடப்பெயர்ப்பினால் புதிதாக இடம்பெற்றிருக்கக்கூடிய மாற்றங்களை சிறப்பாக பகுப்பாய்வு செய்வதற்காக நீங்கள் ஒரு பூட் செய்யப்பட்ட கணினியை டம்ப் செய்யப்பட்ட கணினியுடன் ஒப்பிட உதவுகிறது. ஒரு விருந்தினரை அடையாளம் காண, stsi மற்றும் stfle தரவு பயன்படுத்தப்படுகிறது. ஒரு புதிய செயல்தொகுப்பான, lgr_info_log() நடப்பு தரவை (lgr_info_cur) கடைசியாக பதிவு செய்யப்பட்ட தரவுடன் ஒப்பிடுகிறது(lgr_info_last).

Perf கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது

Perf கருவியானது பிரதான பகுதி பதிப்பு 3.6-rc7 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் பல வழுநீக்கல்களும் மேம்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இவை குறிப்பிடத்தக்க மேம்பாடுகள்:
  • Kprobe நிகழ்வுகள் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • புதிய perf நிகழ்வு கட்டளை வரி தொடரியல் பொறி சேர்க்கப்பட்டுள்ளது, இது நிகழ்வுக் குழுக்களின் வரையறைக்கு கர்லி அடைப்புகளைப் ({ மற்றும் }) பயன்படுத்த அனுமதிக்கிறது, எடுத்துக்காட்டுக்கு: {cycles,cache-misses}.
  • Perf annotate உலாவியானது ASM அழைப்புகள் மற்றும் தாவல்களின் மூலம் வழிசெலுத்தலை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • Perf கருவியானது --uid கட்டளை வரி விருப்பத்துடனான ஒரு பயனருக்கான காட்சியை வழங்கும்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது. perf ஐப் பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட பயனருக்கான பணிகள் மட்டும் காண்பிக்கப்படும்.
  • Perf கருவி இப்போது பல்வேறு வகையான தானியக்க சோதனைகளை வழங்குகிறது.

Uncore PMU ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 உடன் வழங்கப்படும் கெர்னலில் Intel Xeon செயலி X55xx மற்றும் Intel Xeon செயலி X56xx வகையறா செயலிகளுக்கான perf நிகழ்வு துணை முறைமைகளுக்கு "uncore" செயல்திறன் கண்காணிப்பு அலகு (PMU) ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. "uncore" என்பது பல செயலி கோர்களால் பகிரப்பட்ட உண்மையான செயலி தொகுப்பில் உள்ள துணை முறைமைகளைக் குறிக்கிறது, எடுத்துக்காட்டுக்கு L3 தேக்ககத்தைக் கூறலாம். uncore PMU ஆதரவுடன், தொகுப்பு மட்டத்தில் எளிதில் செயல்திறன் தரவைச் சேகரிக்க முடியும்.
PMU நிகழ்வுகள் பாகுபடுத்தலும் perf மூலம் வழுநீக்கலை அனுமதிக்கப்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

memcg நினைவக செயல்நேரம் குறைப்பு

நினைவக கட்டுப்பாட்டு குழுக்கள் அவற்றின் மிக சமீபத்தில் பயன்படுத்திய (LRU) பட்டியலைப் பராமரிக்கின்றன, எடுத்துக்காட்டுக்கு, நினைவகத்தை மறுகோரல் செய்ய இவ்வாறு செய்கின்றன். இந்த பட்டியல் ஒவ்வொரு மண்டலத்துக்கான LRU பட்டியலில் மேல் பகுதியில் இருக்கும். Red Hat Enterprise Linux 6.4 இல், குளோபல் ஒவ்வொரு மண்டலத்துக்கான LRU பட்டியலை முடக்குவதன் மூலமும் அதன் பயனர்களை நினைவகத்துக்கு முன்னான cgroup பட்டியலில் இயங்கும்படி மாற்றுவதன் மூலமும் memcg க்கான நினைவக செயல்நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

நினைவக மறுகோரல் மற்றும் சுருக்கம்

Red Hat Enterprise Linux 6.4 உடன் வழங்கப்படும் கெர்னலானது உயர் வரிசை ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் அல்லது குறை நினைவக அழுத்தம் ஆகியவற்றுக்கான மறுகோரல் மற்றும் சுருக்கத்தைப் பயன்படுத்துகிறது.

பரிமாற்ற செயல்படுத்தல் வசதி மற்றும் இயக்க நேர கருவியாக்க வசதி

Linux கெர்னலில் உள்ள பரிமாற்ற செயல்படுத்தல் வசதிக்கான ஆதரவானது (IBM zEnterprise EC12 இல் கிடைக்கும்) செயல்திறனைப் பாதிக்கக்கூடிய மென்பொருள் பூட்டுதல் செயல்நேரத்தை நீக்குகிறது, மேலும் உயர் பரிமாற்ற திறனை ஊக்குவிக்கும் வகையிலான உயர் அளவீட்டுத் திறனையும் இணையாக்கத் திறனையும் வழங்குகிறது. இயக்க நேர கருவியாக்க வசதிக்கான ஆதரவு (IBM zEnterprise EC12 இல் கிடைக்கும்) புதிய IBM JVM ஆல் உருவாக்கப்படும் குறியீட்டின் மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் சிறப்பாக்கத்துக்கான சுயவிவர நிரல் குறியீட்டை செய்வதற்கான மேம்பட்ட இயங்கம்சத்தை வழங்குகிறது.

தோல்வி-திற பயன்முறை

Red Hat Enterprise Linux 6.4 இல் நெட்ஃபில்ட்டரின் NFQUEUE இலக்கைப் பயன்படுத்தும் போது ஒரு புதிய தோல்வி-திற பயன்முறைக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்முறையில் பயனர்கள் தற்காலிகமாக பேக்கட் ஆய்வை முடக்க உதவுவதோடு கடுமையான பிணைய போக்குவரத்திலும் இணைப்பைப் பராமரிக்க உதவுகிறது.

IBM சிஸ்டம் z க்கான kdump மற்றும் kexec கெர்னல் டம்ப்பிங் இயங்கம்சம் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது

Red Hat Enterprise Linux 6.4 இல், IBM சிஸ்டம் z தனி நிலை மற்றும் ஹைப்பர்வைசர் டம்ப்பிங் இயங்கம்சத்துடன் கூடுதலாக IBM சிஸ்டம் z கணினிகளுக்கான kdump/kexec கெர்னல் டம்ப்பிங் இயங்கம்சம் முழு ஆதரவுள்ள அம்சமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. auto-reserve தெவிட்டுநிலை 4 GB என அமைக்கப்பட்டுள்ளது; இதனால் 4 GB நினைவகத்திற்கு அதிகமான நினைவகம் கொண்டுள்ள எந்த IBM சிஸ்டம் z கணினியிலும் kdump/kexec இயங்கம்சம் செயல்படுத்தப்படுகிறது.
முன்னிருப்பாக kdump க்கு 128 MB முன்னொதுக்கப்பட்டுள்ளதால் போதிய நினைவகம் கிடைக்க வேண்டியது அவசியம். குறிப்பாக Red Hat Enterprise Linux 6.4 க்கு பதிப்பேற்றம் செய்யும் போது இது மிக முக்கியம். கணினி செயலிழப்பு ஏற்படுதல் போன்ற சமயங்களில் டம்ப்பை சேமிக்க போதிய வட்டிடமும் கிடைக்க வேண்டும்.
நீங்கள் /etc/kdump.conf, system-config-kdump அல்லது firstboot மூலம் kdump ஐ அமைவாக்கம் செய்யலாம் அல்லது முடக்கலாம்.

KVM க்கான TSC கெடு ஆதரவு

TSC கெடு டைமர் என்பது Local APIC (LAPIC) டைமரில் ஒரு புதிய பயன்முறையாகும், அது தற்போதுள்ள APIC கடிகார எண்ணிக்கை இடைவேளைக்கு பதிலாக TSC கெடுவின் அடிப்படையில் ஒரு வீச்சு டைமர் குறுக்கீடுகளை உருவாக்கும். இது மிகவும் துல்லியமான டைமர் குறுக்கீடுகளை (1 டிக்குக்கும் குறைவு) வழங்கி OS அட்டவணையாக்கிக்கு நன்மை செய்கிறது. இப்போது KVM இந்த அம்சத்தை விருந்தினர்களுக்கும் உடையதாக்குகிறது.

நிலையான சாதன பெயரிடல்

இந்த அம்சம் கெர்னல் செய்திகளுக்கு சாதன பெயர்கள் மற்றும் (எடுத்துக்காட்டுக்கு, sda, sdb மற்றும் பிற) நிலையான சாதனப் பெயர்களின் மேப்பிங்குகளை (/dev/disk/by-*/ இல் udev ஆல் வழங்கப்படுவது) கெர்னலில் சேமித்து வைக்கிறது. இதனால் பயனர்கள் கெர்னல் செய்திகளிலிருந்து சாதனங்களை அடையாளம் காண முடியும். dmesg கட்டளையின் மூலம் காணக்கூடிய கெர்னல் /dev/kmsg பதிவில் இப்போது, கெர்னல் சாதனங்களுக்காக udev உருவாக்கியுள்ள குறியீட்டு இணைப்புகளும் காண்பிக்கப்படும். இந்த செய்திகள் பின்வரும் வடிவமைப்பில் காண்பிக்கப்படுகின்றன:
udev-alias: <device_name> (<symbolic_link> <symbolic link> …)
எந்த பதிவு பகுப்பாய்வுக் கருவியும் இந்த செய்திகளைக் காண்பிக்க முடியும், இவை syslog மூலம்/var/log/messages இல் சேமிக்கப்பட்டுள்ளன.

புதிய linuxptp தொகுப்பு

Red Hat Enterprise Linux 6.4 இல் தொழில்நுட்ப மாதிரியாக சேர்க்கப்பட்டுள்ள linuxptp தொகுப்பானது Linux க்கான IEEE தரநிலை 1588 இன் படி துல்லிய நேர நெறிமுறையின் (PTP) செயல்படுத்தலாகும். தரநிலையின் உறுதியான செயல்படுத்தலை வழங்குவதும் Linux கெர்னல் வழங்கும் மிகவும் தொடர்புடைய மற்றும் நவீன பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைப் (API) பயன்படுத்துவதுமே இந்த இரட்டை வடிவமைப்பின் நோக்கங்களாகும். பழைய APIகளையும் பிற இயங்குதளங்களையும் ஆதரிப்பது நோக்கமல்ல.

வெளிப்படையான பெரும்பக்கங்கள் ஆவணமாக்கம்

வெளிப்படையான பெரும்பக்கங்களுக்கான ஆவணமாக்கம் பின்வரும் கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளது:
/usr/share/doc/kernel-doc-<version>/Documentation/vm/transhuge.txt

டம்ப் இலக்குகளுக்கான ஆதரவு நிலை

Red Hat Enterprise Linux 6.4 இல், /usr/share/doc/kexec-tools-2.0.0/kexec-kdump-howto.txt கோப்பு Dump Target support status என்ற பிரிவில் ஆதரிக்கப்படும், ஆதரிக்கப்படாத மற்றும் தெரியாத டம்ப் இலக்குகளின் விரிவான பட்டியலை வழங்குகிறது.

பாடம் 3. சாதன இயக்கிகள்

சேமிப்பக இயக்கிகள்

  • நேரடி அணுகல் சேமிப்பக சாதனங்கள் (DASD) சாதன இயக்கியானது வன்பொருள் அல்லது மைக்ரோகுறியீட்டால் கண்டறியப்பட முடியாத பாதை அமைவாக்கப் பிழைகளைக் கண்டறியும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பிழைகளை வெற்றிகரமாகக் கண்டறிந்தால், சாதன இயக்கி அந்த பாதைகளைப் பயன்படுத்தாது. இந்த அம்சத்தைக் கொண்டு எடுத்துக்காட்டாக DASD சாதன இயக்கியானது ஒரு குறிப்பிட்ட துணை சேனலுக்கு ஒதுக்கப்பட்ட, ஆனால் வேறு சேமிப்பு சேவையகங்களுக்கு இட்டுச்செல்லும் பாதைகளைக் கண்டறிகிறது .
  • zfcp சாதன இயக்கி புதுப்பிக்கப்பட்டு சிஸ்டம் z ஃபைபர் சேனல் நெறிமுறை (FCP) அடாப்டர் கார்டின் மேம்படுத்தப்பட்ட பயன்முறையை ஆதரிக்கும் விதத்தில் தரவு கட்டமைப்புகளும் பிழை கையாளும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பயன்முறையில், தொகுப்பில் உள்ள நினைவகமானது பெரிய மற்றும் வேகம் குறைவான I/O கோரிக்கைகளால் தடுக்கப்படும் போது அடாப்டரானது தரவை நேரடியாக நினைவகத்திலிருந்து SAN க்கு அனுப்புகிறது (தரவு ரௌட்டிங்).
  • mtip32xx இயக்கியானது புதுப்பிக்கப்பட்டு சமீபத்திய PCIe SSD இயக்கிகளுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • எமுலெக்ஸ் ஃபைபர்-சேனல் வழங்கி பஸ் அடாப்டர்களுக்கான lpfc இயக்கியானது பதிப்பு 8.3.5.82.1p ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • QLogic ஃபைபர் சேனல் HBAகளுக்கான qla2xxx இயக்கியானது சமீபத்திய பதிப்பு 8.04.00.04.06.4-k க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் QLogic's 83XX குவிந்த பிணைய அடாப்டருக்கான (CNA) ஆதரவு, QLogic அடாப்டர்களுக்கான 16 GBps FC ஆதரவு மற்றும் HP ProLiant சேவையகங்களுக்கான புதிய படிவ காரணி CNA ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
  • qla4xxxx இயக்கியானது பதிப்பு v5.03.00.00.06.04-k0 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் change_queue_depth API ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, பல வழுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் பல மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • QLogic 4Gbps ஃபைபர் சேனல் HBA க்கான ql2400-firmware சாதன நிரலானது பதிப்பு 5.08.00 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • QLogic 4Gbps ஃபைபர் சேனல் HBA க்கான ql2500-firmware சாதன நிரலானது பதிப்பு 5.08.00 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • IBM Power Linux RAID SCSI HBAகளுக்கான ipr இயக்கியானது பதிப்பு 2.5.4 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் Power7 6Gb SAS அடாப்டர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது இந்த அடாப்டர்களில் SAS VRAID திறன்களையும் செயல்படுத்துகிறது.
  • hpsa இயக்கியானது பதிப்பு 2.0.2-4-RH1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் HP ஸ்மார்ட் அரே ஜெனரேஷன் 8 வகை கன்ட்ரோலர்களுக்கான PCI-IDகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • Broadcom NetXtreme II iSCSI க்கான bnx2i இயக்கியானது பதிப்பு 2.7.2.2 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் பொதுவான வன்பொருள் ஆதரவு செயலாக்கப்பட்டுள்ளது.
    இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் Broadcom சாதனத்திலான iSCSI மற்றும் FCoE பூட் ஆதரவு முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் bnx2i மற்றும் bnx2fc Broadcom இயக்கிகளால் வழங்கப்படுகின்றன.
  • Broadcom Netxtreme II 57712 சிப்புக்கான bnx2fc இயக்கியானது பதிப்பு 1.0.12 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் Broadcom சாதனத்திலான iSCSI மற்றும் FCoE பூட் ஆதரவு முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் bnx2i மற்றும் bnx2fc Broadcom இயக்கிகளால் வழங்கப்படுகின்றன.
  • mpt2sas இயக்கியானது பதிப்பு 13.101.00.00 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் Linux BSG இயக்கிக்கான பல பிரிவு பயன்முறைக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • Brocade bfa ஃபைபர் சேனல் மற்றும் FCoE இயக்கியானது பதிப்பு 3.0.23.0 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் Brocade 1860 16Gbps ஃபைபர் சேனல் அடாப்டர் ஆதரவு, Dell PowerEdge 12ஆம் தலைமுறை சேவையகங்களிலான புதிய வன்பொருள் ஆதரவு மற்றும் issue_lip ஆதரவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. bfa சாதன நிரல் பதிப்பு 3.0.3.1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ServerEngines BladeEngine 2 Open iSCSI சாதனங்களுக்கான be2iscsi இயக்கியானது பதிப்பு 4.4.58.0r க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் iSCSI நெட்லிங்க் VLAN ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • TrueScale HCAகளுக்கான qib இயக்கியானது பின்வரும் மேம்பாடுகளுடன் சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது:
    • மேம்பட்ட NUMA விழிப்புணர்வு
    • செயல்திறன் அளவீட்டு செய்தியிடல் (PSM) ஃபேப்ரிக்குகளுக்கான நெரிசல் கட்டுப்பாட்டு ஏஜன்ட் (CCA)
    • PSM ஃபேப்ரிக்குகளுக்கான இரட்டை ரெயில்
    • செயல்திறன் மேம்படுத்தல்கள் மற்றும் வழுநீக்கல்கள்
  • பின்வரும் இயக்கிகள் சமீபத்திய பிரதான பகுதி அம்சங்களையும் வழுநீக்கல்களையும் சேர்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளன: ahci, md/bitmap, raid0, raid1, raid10 மற்றும் raid456.

பிணைய இயக்கிகள்

  • NetXen மல்டி போர்ட் (1/10) ஜிகாபைட் பிணையத்திற்கான netxen_nic இயக்கியானது பதிப்பு 4.0.80 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் miniDIMM ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. netxen_nic சாதன நிரல் பதிப்பு 4.0.588 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • bnx2x இயக்கியானது பதிப்பு 1.72.51-0 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் Broadcom 57800/57810/57811/57840 சிப்புக்கான ஆதரவும் பொது வழுநீக்கல்களும் Broadcom 57710/57711/57712 சிப்புகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சாதனநிரலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதுப்பிப்பில் பின்வரும் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன:
    • Broadcom 57712/578xx சிப்களில் iSCSI ஆஃப்லோடு மற்றும் ஈத்தர்நெட்டில் தரவு மைய பிரிட்ஜிங்/ஃபைபர் சேனல் (DCB/FCOE) வசதிக்கான ஆதரவு. Broadcom 57840 சிப்பானது 4x10G அமைவாக்கத்தில் மட்டுமே ஆதரிக்கப்படும், மேலும் அது iSCSI ஆஃப்லோடு மற்றும் FCoE ஐ ஆதரிக்காது. எதிர்கால வெளியீடுகள் கூடுதல் அமைவாக்கங்களையும் iSCSI ஆஃப்லோடு மற்றும் FCoE ஆகியவற்றையும் ஆதரிக்கும்.
    • ஆற்றல் திறம்மிக்க ஈத்தர்நெட் (EEE) உட்பட கூடுதல் மெய் அடுக்கு ஆதரவு.
    • iSCSI ஆஃப்லோடு மேம்பாடுகள்
    • OEM-சார் அம்சங்கள்
  • ServerEngines BladeEngine2 10Gbps பிணைய சாதனங்களுக்கான be2net இயக்கியானது பதிப்பு 4.4.31.0r க்கு புதுப்பிக்கப்பட்டு குவிந்த ஈத்தர்நெட்டில் RDMA வசதிக்கான(RoCE) ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
    கூடுதலாக, இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் Emulex be2net இயக்கியின் SR-IOV செயலம்சம் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. SR-IOV ஆனது அனைத்து Emulex ப்ரான்ட் மற்றும் OEM வகை BE3-அடிப்படையிலான வன்பொருள்கள் அனைத்திலும் இயங்கும், அவை அனைத்துக்கும் be2net இயக்கி மென்பொருள் தேவை.
  • ixgbevf இயக்கியானது பதிப்பு 2.6.0-k க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் சமீபத்திய வன்பொருள் ஆதரவும் மேம்பாடுகளும் வழுநீக்கல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • Chelsio Terminator4 10G யுனிஃபைடு வயர் பிணைய கன்ட்ரோலர்களுக்கான cxgb4 இயக்கியானது புதுப்பிக்கப்பட்டுள்ளது, அதில் Chelsio T480-CR மற்றும் T440-LP-CR அடாப்டர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • Chelsio T3 குடும்ப பிணைய சாதனங்களுக்கான The cxgb3 இயக்கியானது பதிப்பு 1.1.5-ko க்குபுதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Intel 10 ஜிகாபைட் PCI Express பிணைய சாதனங்களுக்கான ixgbe இயக்கியானது 3.9.15-k பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் தரவு மைய ப்ரிட்ஜிங் (DCB) அல்லது பெறுதல் - பக்க அளவிடல் (RSS) உடன் SR-IOV க்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, ஒரு தொழில்நுட்ப மாதிரியாக PTP ஆதரவு, சமீபத்திய வன்பொருள் ஆதரவு, மேம்பாடுகள் மற்றும் வழுநீக்கல்கள்.
  • iw_cxgb3 இயக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • iw_cxgb4 இயக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Intel PRO/1000 பிணைய சாதனங்களுக்கான e1000e இயக்கி புதுப்பிக்கப்பட்டு சமீபத்திய வன்பொருள் ஆதரவு, அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் பல வழுநீக்கல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • Cisco 10G ஈத்தர்நெட் சாதனங்களுக்கான enic இயக்கியானது பதிப்பு 2.1.1.39 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • igbvf இயக்கியானது (Intel ஜிகாபைட் மெய்நிகர் செயல்தன்மை பிணைய இயக்கி) சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Intel ஜிகாபைட் ஈத்தர்நெட் அடாப்டர்களுக்கான igb இயக்கி பதிப்பு 4.0.1 க்கு புதுப்பிக்கப்பட்டு சமீபத்திய வன்பொருள் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், igb இயக்கியில் தொழில்நுட்ப மாதிரியாக PTP ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • Broadcom Tigon3 ஈத்தர்நெட் சாதனங்களுக்கான tg3 இயக்கி பதிப்பு 3.124 க்கு புதுப்பிக்கப்பட்டு புதிய வன்பொருள் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் tg3 இயக்கியில் தொழில்நுட்ப மாதிரியாக PTP ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • HP NC-வரிசை QLogic 10 ஜிகாபைட் சேவையக அடாப்டர்களுக்கான qlcnic இயக்கியானது பதிப்பு 5.0.29 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Brocade 10Gb PCIe ஈத்தர்நெட் கன்ட்ரோலர்களுக்கான Brocade bna இயக்கியானது பதிப்பு 3.0.23.0 க்கு புதுப்பிக்கப்பட்டு Dell PowerEdge 12 ஆம் தலைமுறை சேவையகங்களுக்கான வன்பொருள் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் Brocade அல்லாத ட்வினாக்ஸ் காப்பர் கேபிள்களின் பயன்பாட்டை அனுமதிக்கிறது. bna சாதன நிரலானது பதிப்பு 3.0.3.1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • Broadcom NetXtreme II cnic இயக்கியானது பதிப்பு 2.5.13 க்கு புதுப்பிக்கப்பட்டு புதிய அம்சங்களும் வழுநீக்கல்களும் OEM இயங்கு தளங்களுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளன.

மற்ற இயக்கிகள்

  • Intel செயலிகளுக்கான intel_idle cpuidle இயக்கியானது புதுப்பிக்கப்பட்டு Intel இன் Xeon E5-XXX V2 வரிசை செயலிகளுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • wacom இயக்கியானது புதுப்பிக்கப்பட்டு CTL-460 வேக்கோம் பேம்பூ பென், வேக்கோம் இன்ட்டியோஸ்5 டாப்ளெட் மற்றும் வேக்கோம் சின்ட்டிக் 22HD பென் டிஸ்ப்ளே ஆகியவற்றுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • ALSA HDA ஒலி இயக்கியானது புதிய வன்பொருளுக்கான ஆதரவை இயக்கும் விதத்தில் அல்லது மேம்படுத்தும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டு பல வழுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • mlx4_en இயக்கியானது சமீபத்திய பிராதன பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • mlx4_ib இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • mlx4_core இயக்கியானது சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • z90crypt சாதன இயக்கியானது புதிய க்ரிப்டோ எக்ஸ்ப்ரஸ் 4 (CEX4) அடாப்டர் கார்டை ஆதரிக்கும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பாடம் 4. பிணையமாக்கல்

HAProxy

HAProxy என்பது TCP மற்றும் HTTP-அடிப்படையிலான பயன்பாடுகளுக்கான தனிநிலை, அடுக்கு 7, உயர்செயல்திறன் கொண்ட பிணைய சுமை சமநிலையாக்கியாகும், இது HTTP கோரிக்கைகளின் உள்ளடக்கத்தைப் பொறுத்து பல்வேறு வகை திட்டமிடல் செயல்களைச் செய்யக்கூடியது. Red Hat Enterprise Linux 6.4 இல் haproxy தொகுப்பு ஒரு தொழில்நுட்ப மாதிரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

பாடம் 5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை

SSSD முழு ஆதரவுள்ள அம்சங்கள்

Red Hat Enterprise Linux 6.3 இல் அறிமுகமாகியுள்ள பல அம்சங்கள் இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் முழுமையாக ஆதரிக்கப்படும். குறிப்பாக:
  • SSH விசைகளுக்கான மைய நிர்வாகத்திற்கான ஆதரவு,
  • SELinux பயனர் மேப்பிங்,
  • மற்றும் automount மேப் தேக்ககப்படுத்தலுக்கான ஆதரவு.

புதிய SSSD தேக்கக சேமிப்பக வகை

Kerberos பதிப்பு 1.10 இல் DIR: எனும் புதிய தேக்கக சேமிப்பக வகை சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் Kerberos ஆல் பல விசை விநியோக மையங்களுக்கான (KDCs) டிக்கெட் வழங்கும் டிக்கெட்டுகளை பராமரிக்க முடிகிறது (TGTs) மேலும் அதனால் கெர்பரோஸ் விழிப்புணர்வுள்ள வளங்களுடன் கையாண்டு முடிவெடுக்கையில் அவற்றில் ஒன்றை தானாக தேர்ந்தெடுக்க முடிகிறது. Red Hat Enterprise Linux 6.4 இல், SSSD மூலம் புகுபதிவு செய்துள்ள பயனர்களுக்கான DIR: தேக்ககத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க ஏதுவாக SSSD மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் தொழில்நுட்ப மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

AD-அடிப்படையிலான நம்பிக்கை டொமைன்களை வெளி குழுக்களில் சேர்த்தல்

Red Hat Enterprise Linux 6.4 இல், ipa group-add-member கட்டளையைக் கொண்டு அடையாள நிர்வாகத்தில், நீங்கள் செயலில் உள்ள கோப்பக அடிப்படையிலான நம்பிக்கை டொமைன்களின் உறுப்பினர்களை வெளி குழுக்கள் எனக் குறிக்கப்பட்ட குழுக்களில் சேர்க்க முடியும். இந்த உறுப்பினர்களை domain- அல்லது UPN-based தொடரியலைப் பயன்படுத்தி பெயர்களைக் கொண்டு குறிப்பிடலாம், எடுத்துக்காட்டுக்கு AD\UserName அல்லது AD\GroupName அல்லது User@AD.Domain. இந்த வடிவத்தில் குறிப்பிட்டால், உறுப்பினர்களின் பாதுகாப்பு அடையாளங்காட்டி (SID) மதிப்பைப் பெற உறுப்பினர்கள், செயலில் உள்ள கோப்பக அடிப்படையிலான நம்பிக்கை டொமைன்களின் குளோபால் கேட்டலாகுக்கு எதிராக தீர்வு காணப்படுகின்றனர்.
மாறாக, நேரடியாக ஒரு SID மதிப்பையும் குறிப்பிட முடியும். இதைச் செய்யும்பட்சத்தில், ipa group-add-member கட்டளையானது SID மதிப்பின் டொமைன் பகுதியானது நம்பிக்கை செயலிலுள்ள டொமைன்களில் ஒன்றுதானா என்பதை மட்டுமே சரிபார்க்கும். டொமைனுக்குள்ளான SID மதிப்பின் செல்லுபடித் தன்மையை சரிபார்க்க எந்த முயற்சியும் செய்யப்படாது.
வெளிப்புற உறுப்பினர்களைக் குறிப்பிட, நேரடியாக அவர்களின் SID மதிப்புகளை வழங்குவதைக் காட்டிலும் பயனர் அல்லது குழு பெயர் தொடரியலைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

Auto-renew அடையாள நிர்வாக துணைஅமைப்பு சான்றிதழ்கள்

ஒரு புதிய சான்றிதழ் ஆணையத்திற்கான முன்னிருப்பு செல்லுபடிக் காலம் 10 ஆண்டுகள். CA ஆனது தனது துணை அமைப்புகளுக்காக பல சான்றிதழ்களை வழங்குகிறது (OCSP, audit log மற்றும்பிற). துணை அமைப்பு சான்றிதழ்கள் வழக்கமாக 2 ஆண்டுகள் செல்லுபடியாகும். சான்றிதழ்கள் காலாவதியானால், CA சரியாக துவங்காது அல்லது செயல்படாது. ஆகவே, Red Hat Enterprise Linux 6.4 இல், அடையாள நிர்வாக சேவைகள் அவற்றின் துணை அமைப்பு சான்றிதழ்களை தானாக புதுப்பிக்கும் திறம் கொண்டவை. certmonger துணை அமைப்பு சான்றிதழ்களை கண்காணிக்கின்றன, அவை சான்றிதழ்கள் காலாவதியாகும் முன்பே தானியக்கமாக அவற்றை புதுப்பிக்க முயற்சிக்கின்றன.

அடையாள நிர்வாகத்தில் பதிவு பெற்றுள்ள கிளையன்ட்டுகளில் உள்ள OpenLDAP கிளையன்ட் கருவிகளின் தானியக்க அமைவாக்கம்

Red Hat Enterprise Linux 6.4 இல், OpenLDAP ஆனது அடையாள நிர்வாக கிளையன்ட் நிறுவலின் போதே முன்னிருப்பு LDAP URI, Base DN மற்றும் ஒரு TLS சான்றிதழ் ஆகியவை கொண்டு தானியக்கமாக அமைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அடையாள நிர்வாக கோப்பக சேவையகத்தைக் கண்டுபிடிப்பதற்காக LDAP தேடல்களை மேற்கொள்ளும் போது பயனர்களின் அனுபவம் மேலும் சிறப்பாக அமைய உதவும்.

python-nss க்கான PKCS#12 ஆதரவு

பிணைய பாதுகாப்பு சேவைகளுக்கு (NSS) Python பிணைப்புகளை வழங்கும் python-nss தொகுப்பு மற்றும் Netscape Portable Runtime (NSPR) ஆகியவை PKCS #12 ஆதரவைக் கொண்டிருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

DNS க்கான நிலையான முழுமையான தேடல்

Red Hat Enterprise Linux 6.4 இல் உள்ள LDAP இல் மண்டலங்கள் மற்றும் அவற்றின் வளப் பதிவுகள் இரண்டுக்குமான நிலையான தேடலுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. நிலையான தேடலின் உதவியால் LDAP தரவுத்தளத்திலான எல்லா மாற்றங்களும் bind-dyndb-ldap செருகு நிரலுக்கு உடனடியாக தெரிவிக்கப்படுவது சாத்தியமாகிறது. தொடர்ந்த போலிங் செயலின் மூலமாக தேவைப்படும் பிணைய பட்டையகல பயன்பாட்டையும் குறைக்கிறது.

புதிய CLEANALLRUV செயல்பாடு

டேட்டாபேஸ் ரிப்லைகா அப்டேட் வெக்டாரில் (RUV) உள்ள காலாவதியான உருப்படிகள் CLEANRUV செயலைக் கொண்டு நீக்கப்பட முடியும், இந்தக் கட்டளை ஒற்றை சப்ளையர் அல்லது மாஸ்டரிலிருந்து அவ்வுருப்படிகளை நீக்கும். Red Hat Enterprise Linux 6.4 இல் ஒரு புதிய CLEANALLRUV செயல்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, இது எல்லா ரிப்லைகாவிலிருந்தும் காலாவதியான RUV தரவை நீக்கும், மேலும் இந்த கட்டளையை சப்ளையர்/மாஸ்டரிலிருந்து மட்டுமே இயக்க வேண்டும்.

samba4 தரவகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன

samba4 தரவகங்கள் (samba4-libs தொகுப்பால் வழங்கப்படுவது) சமீபத்திய பிரதான பகுதி பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன, அதனால் செயலில் உள்ள கோப்பக (AD) டொமைன்களுடனான இடைசெயல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது SSSD ஆனது AD விசை விநியோக மையம் (KDC) வழங்கும் அனுமதி பண்புக்கூறு சான்றிதழை பாகுபடுத்த libndr-krb5pac ஐப் பயன்படுத்துகிறது. மேலும், அக பாதுகாப்பு அமைப்பிலும் (LSA) Net Logon சேவைகளிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதனால் ஒரு Windows கணினியிலிருந்து நம்பிக்கை சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும். samba4 தொகுப்பைச் சார்ந்துள்ள பல தள கெர்பரோஸ் நம்பிக்கை செயல்தன்மை பற்றிய மேலும் தகவலுக்கு, பகுதி 5, “அடையாள நிர்வாகத்திலான பல தள கெர்பரோஸ் நம்பிக்கை செயலம்சம்” ஐப் பார்க்கவும்.

எச்சரிக்கை

நீங்கள் Red Hat Enterprise Linux 6.3 இலிருந்து Red Hat Enterprise Linux 6.4 க்கு பதிப்பேற்றம் செய்து அதே சமயம் Samba வைப் பயன்படுத்தினால், பதிப்பேற்றத்தின் போது ஏதும் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க, samba4 தொகுப்பை நிறுவல் நீக்கம் செய்யவும்.
பல தள கெர்பரோஸ் செயலம்சமானது தொழில்நுட்ப மாதிரியாகக் கருதப்படுவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட samba4 கூறுகள் தொழில்நுட்ப மாதிரிகளாகக் கருதப்படுகின்றன. எந்த Samba தொகுப்புகள் தொழில்நுட்ப மாதிரிகளாகக் கருதப்படும் என்பது பற்றி மேலும் தகவலுக்கு அட்டவணை 5.1, “Samba4 தொகுப்பு ஆதரவு” ஐப் பார்க்கவும்.
தொகுப்பு பெயர் 6.4 இல் புதிய தொகுப்பா? ஆதரவு நிலை
samba4-libs இல்லை தொழில்நுட்ப மாதிரி, OpenChange க்குத் தேவைப்படும் செயலம்சம் தவிர
samba4-pidl இல்லை தொழில்நுட்ப மாதிரி, OpenChange க்குத் தேவைப்படும் செயலம்சம் தவிர
samba4 இல்லை தொழில்நுட்ப மாதிரி
samba4-client ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-common ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-python ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-winbind ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-dc ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-dc-libs ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-swat ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-test ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-winbind-clients ஆம் தொழில்நுட்ப மாதிரி
samba4-winbind-krb5-locator ஆம் தொழில்நுட்ப மாதிரி
அட்டவணை 5.1. Samba4 தொகுப்பு ஆதரவு

அடையாள நிர்வாகத்திலான பல தள கெர்பரோஸ் நம்பிக்கை செயலம்சம்

அடையாள நிர்வாகம், வழங்கும் பல தள கெர்பரோஸ் நம்பிக்கை செயலம்சமானது ஒரு தொழில்நுட்ப மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஒரு அடையாள நிர்வாகத்திற்கும் ஒரு செயல்மிகு கோப்பக டொமைனுக்கும் இடையே ஒரு நம்பிக்கை உறவை உருவாக்க உதவுகிறது. அதாவது AD டொமைனில் உள்ள பயனர்கள் தங்கள் AD சான்றளிப்புகளைப் பயன்படுத்தி அடையாள நிர்வாகத்தின் வளங்களை அணுக முடியும். அடையாள நிர்வாகம் மற்றும் AD டொமைன் கன்ட்ரோலர்களிடையே தரவு எதுவும் ஒத்திசைக்கப்பட வேண்டியதில்லை; AD பயனர்கள் AD டொமைன் கன்ட்ரோலரில் எப்போதும் அங்கீகரிக்கப்படுவர், மேலும் பயனர்களது தகவல்கள் ஒத்திசைவின் அவசியம் இன்றியே தேடியெடுக்கப்படுகிறது.
இந்த அம்சம் மாற்று தொகுப்பு ipa-server-trust-ad ஆல் வழங்கப்பட்டால். இந்த தொகுப்பு samba4 இல் கிடைக்கும் அம்சங்களை மட்டுமே சார்ந்துள்ளது. ஏனெனில் samba4-* தொகுப்புகள் அவற்றுக்குரிய samba-* தொகுப்புகளுடன் முரணை ஏற்படுத்துகின்றன, எல்லா samba-* தொகுப்புகளையும் நீக்கிய பிறகே ipa-server-trust-ad ஐ நிறுவ முடியும்.
ipa-server-trust-ad தொகுப்பை நிறுவிய பிறகு, அடையாள நிர்வாகம் நம்பிக்கைகளைக் கையாள முடியும்படி செய்ய, ipa-adtrust-install கட்டளையை எல்லா அடையாள நிர்வாக சேவையகங்களிலும் ரிப்லைகாகளிலும் இயக்க வேண்டும். இதைச் செய்த பிறகு ipa trust-add கட்டளையைப் பயன்படுத்தி கட்டளை முனையத்திலோ அல்லது வலை இடைமுகத்திலோ நம்பிக்கையை நிறுவலாம். மேலும் தகவலுக்கு https://access.redhat.com/knowledge/docs/Red_Hat_Enterprise_Linux/ என்ற முகவரியில் உள்ள அடையாள நிர்வாக வழிகாட்டியின் பல தள கெர்பரோஸ் நம்பிக்கைகள் மூலமாக செயல்மிகு கோப்பகங்களை ஒருங்கிணைத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

389 கோப்பக சேவையகத்திற்கான Posix திட்டவடிவ ஆதரவு

Windows செயல்மிகு கோப்பகமானது (AD) பயனர் மற்றும் குழு உள்ளீடுகளுக்கு POSIX திட்டவடிவத்தை (RFC 2307 மற்றும் 2307bis) ஆதரிக்கிறது. பெரும்பாலும், POSIX பண்புக்கூறுகள் உள்ளிட்ட பயனர் மற்றும் குழு தரவின் அங்கீகரிப்பு மூலமாக AD யே பயன்படுத்தப்படுகிறது. Red Hat Enterprise Linux 6.4 இல், கோப்பக சேவையக Windows Sync இனி இந்தப் பண்புக்கூறுகளைப் புறக்கணிக்காது. இப்போது பயனர்கள் Windows Sync ஐக் கொண்டு AD மற்றும் 389 கோப்பக சேவையகம் ஆகியவற்றுக்கிடையே POSIX பண்புக்கூறுகளை ஒத்திசைக்கலாம்.

குறிப்பு

கோப்பக சேவையகத்தில் புதிய பயனர் மற்றும் குழு உள்ளீடுகளைச் சேர்க்கும் போது, POSIX பண்புக்கூறுகள் AD உடன் ஒத்திசைக்கப்படாது. AD இல் புதிய பயனர் மற்றும் குழு உள்ளீடுகளைச் சேர்த்தால்கோப்பக சேவையகத்துடன் ஒத்திசைக்கப்படும், பண்புக்கூறுகளில் மாற்றம் செய்தால் அவை இரு தரப்பிலும் ஒத்திசைக்கும்.

பாடம் 6. பாதுகாப்பு

sudoers உள்ளீடுகளின் தேடியறிதல்களில் பொருத்தங்களை அங்கீகரித்த முறையில் நடத்துதல்

sudo பயன்பாட்டால் sudoers உள்ளீடுகளுக்காக /etc/nsswitch.conf கோப்பை கலந்தாலோசிக்க முடியும் மற்றும் கோப்புகளில் அல்லது LDAP ஐப் பயன்படுத்தி அவற்றைத் தேடியறிய முடியும். முன்னதாக, sudoers உள்ளீடுகளின் முதல் தரவுத்தளத்தில் முதல் பொருத்தம் கண்டறியப்பட்டதும், தேடியறிதல் செயல்பாடு, தொடர்ந்து பிற தரவுத்தளங்களிலும் (கோப்புகள் உட்பட) நடைபெறும். Red Hat Enterprise Linux 6.4 இல், /etc/nsswitch.conf கோப்பில் ஒரு விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது, அதைக் கொண்டு பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தரவுத்தளத்தைக் குறிப்பிடலாம், இதனால் அந்த தரவுத்தளத்தில் sudoers உள்ளீட்டு பொருத்தத்தைக் கண்டறிந்தால் போதும் என அது புரிந்துகொள்ளும். இதனால் மற்ற தரவுத்தளங்களில் வினவும் அவசியம் இல்லாமல் போகிறது; இதனால் பெரிய சூழல்களில் sudoers உள்ளீட்டைத் தேடியறியும் செயலின் செயல்திறன் மேம்படுகிறது. இந்த குணம் முன்னிருப்பாக செயல்படுத்தப்படாது, தேர்ந்தெடுத்த தரவுத்தளத்தை அடுத்து [SUCCESS=return] சரத்தைச் சேர்ப்பதன் மூலமே செயல்படுத்த முடியும். இந்த சரத்துக்கு முன்புள்ள தரவுத்தளத்தில் ஒரு பொருத்தம் கண்டறியப்பட்டதும், மற்ற தரவுத்தளங்கள் தேவைப்படாது.

pam_cracklib க்கான கூடுதல் கடவுச்சொல் சோதனைகள்

pam_cracklib தொகுதிக்கூறு புதுப்பிக்கப்பட்டு பல புதிய கடவுச்சொல் உறுதி சோதனைகளை மேற்கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது:
  • சில குறிப்பிட்ட அங்கீகரிப்பு கொள்கைகள் "abcd" அல்லது "98765" என்பவை போன்ற தொடர்ச்சியான நீண்ட தொடர்களைக் கொண்டுள்ள கடவுச்சொற்களை அனுமதிக்காது. இந்தப் புதுப்பிப்பானது maxsequence விருப்பத்தைப் பயன்படுத்தி இந்த தொடர்களின் அதிகபட்ச நீளத்தைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை வழங்குகிறது.
  • இப்போது pam_cracklib தொகுதிக்கூறு, ஒரு புதிய கடவுச்சொல்லில் /etc/passwd கோப்பிலிருந்து GECOS புலங்கள் உள்ளதா என சோதிக்க அனுமதிக்கிறது. GECOS புலமானது ஒரு தாக்குதல் நடத்த விரும்புபவர் பயனரின் கடவுச்சொல்லைத் தகர்க்க முயற்சிக்கையில் பயன்படுத்தக்கூடிய பயனரின் முழுப்பெயர், தொலைபேசி எண் போன்ற கூடுதல் தகவல்களைச் சேமிக்க பயன்படுகிறது.
  • இப்போது pam_cracklib தொகுதிக்கூறு, maxrepeatclass விருப்பத்தின் மூலம் ஒரு கடவுச்சொல்லில் இடம்பெறக்கூடிய (சிற்றெழுத்து, பேரெழுத்து, எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் போன்ற) ஒரே வகையைச் சேர்ந்த அடுத்தடுத்த அதிகபட்ச எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட அனுமதிக்கிறது.
  • இப்போது pam_cracklib தொகுதிக்கூறு enforce_for_root விருப்பத்தை ஆதரிக்கிறது, இது root கணக்குக்கான புதிய கடவுச்சொற்களின் சிக்கலான தன்மைக்குரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது.

tmpfs பாலியின்ஸ்டேன்ட்டியேஷனுக்கான அளவு விருப்பம்

பல tmpfs மவுன்ட்டுகளைக் கொண்ட கணினியில், அவை கணினியின் நினைவகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் நிகழ்வைத் தடுப்பதற்காக அவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இப்போது PAM புதுப்பிக்கப்பட்டு, பயனர்கள் tmpfs பாலியின்ஸ்டேட்டியேஷனைப் பயன்படுத்தும் போது /etc/namespace.conf அமைவாக்கக் கோப்பில் mntopts=size=<size> விருப்பத்தைப் பயன்படுத்தி tmpfs கோப்புமுறைமை மவுன்ட்டின் அதிகபட்ச அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

செயலிலா கணக்குகளைப் பூட்டுதல்

சில அங்கீகரிப்புக் கொள்கைகளுக்கு, குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தாமல் உள்ள கணக்குகளைப் பூட்டுவதற்கான ஆதரவு தேவைப்படுகிறது. Red Hat Enterprise Linux 6.4 இல் pam_lastlog தொகுதிக்கூறில் ஒரு கூடுதல் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இதைக் கொண்டு பயனர்கள் அமைவாக்கம் செய்யத்தக்க நாட்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, அத்தனை நாட்களுக்குப் பிறகு கணக்குகளைப் பூட்ட முடியும்.

libica க்கான புதிய செயல் பயன்முறைகள்

IBM சிஸ்டம் z இல் உள்ள IBM eServer க்ரிப்ட்டோகிராஃபிக் ஆக்சலரேட்டர் (ICA) வன்பொருளை அணுகுவதற்கான libica தரவகம், கிரிப்ட்டோகிராஃபிக் செயலம்சத்திற்கான மைய செயலி உதவியில் (CPACF) செய்தி பாதுகாப்பு உதவி நீட்டிப்பு 4 அறிவுறுத்தல்களை ஆதரிக்கும் புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. DES மற்றும் 3DES தொகுப்பு சிஃபர்களுக்கு, இப்போது பின்வரும் செயல் பயன்முறைகள் ஆதரிக்கப்படும்:
  • Ciphertext எடுத்துக்கொள்ளுதல் மூலமான சிஃபர் தொகுப்பு சங்கிலியாக்கம் (CBC-CS)
  • சிஃபர்-அடிப்படையிலான செய்தி அங்கீகரிப்பு குறியீடு (CMAC)
AES தொகுப்பு சிஃபர்குக்கு, இப்போது பின்வரும் செயல் பயன்முறைகள் ஆதரிக்கப்படும்:
  • Ciphertext எடுத்துக்கொள்ளுதல் மூலமான சிஃபர் தொகுப்பு சங்கிலியாக்கம் (CBC-CS)
  • சிஃபர் தொகுப்பு சங்கிலியாக்க செய்தி அங்கீகரிப்பு குறியீட்டுடனான கவுன்ட்டர் (CCM)
  • Galois/கவுன்ட்டர் (GCM)
இந்த சிக்கலான கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகளின் முடுக்கமானது குறிப்பிடத்தக்க வகையில் IBM சிஸ்டம் z கணினிகளின் செயல்திறனை மேம்படுத்துகின்றன.

சிஸ்டம் z க்கான zlib சுருக்க தரவகத்தின் மேம்பாடு மற்றும் அதற்கான ஆதரவு

ஒரு பொது தேவைக்கான இழப்பற்ற தரவுச் சுருக்க தரவகமான zlib தரவகம், IBM சிஸ்டம் z இல் சுருக்க செயல்திறனை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஃபால்பேக் ஃபயர்வால் அமைவாக்கம்

இப்போது iptables மற்றும் ip6tables சேவைகள், முன்னிருப்பு அமைவாக்கங்களைப் பயன்படுத்த முடியாதபட்சத்தில் ஒரு ஃபால்பேக் ஃபயர்வால் அமைவாக்கத்தை ஒதுக்கியமைக்கும் வசதியை வழங்குகின்றன. /etc/sysconfig/iptables இலிருந்து ஃபயர்வால் விதிகளைப் பெற்று பயன்படுத்தும் செயல் தோல்வியடைந்தால், ஃபால்பேக் கோப்பு இருந்தால் அது பயன்படுத்தப்படுகிறது. ஃபால்பேக் கோப்பானது /etc/sysconfig/iptables.fallback என பெயரிடப்படுகிறது, மேலும் அது (/etc/sysconfig/iptables போன்றே) iptables-save கோப்பு வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. ஃபால்பேக் கோப்பின் பயன்பாடும் தோல்விடைந்தால், மேலும் ஃபால்பேக் இல்லை. ஒரு ஃபால்பேக் கோப்பை உருவாக்க, வழக்கமான ஃபயர்வால் கருவிகளைப் பயன்படுத்தி, அந்தக் கோப்பை ஃபால்பேக் கோப்புக்கு நகலெடுக்கவும் அல்லது அந்தப் பெயரை வைக்கவும். ip6tables சேவைக்கும் இதே செயல்முறையைப் பயன்படுத்தவும், இதில் iptables என இருக்கும் அனைத்தையும் ip6tables என்று இடமாற்றவும்.

பாடம் 7. உரிமைகள்

சர புதுப்பிப்புகள்

Red Hat Enterprise Linux 6.4 இல், சந்தா நிர்வாகியில் பல சரங்கள் மறுபெயரிடப்பட்டுள்ளன:
  • சந்தாபெறு என்பது இணை என மாற்றப்பட்டுள்ளது
  • தானியக்க-சந்தாபெறுதல் என்பது தானியக்க-இணைப்பு என மாற்றப்பட்டுள்ளது
  • சந்தாவிலகு என்பது நீக்கு என மாற்றப்பட்டுள்ளது
  • நுகர்வோர் என்பது கணினி அல்லது அலகு என மாற்றப்பட்டுள்ளது

பதிலி இணைப்பை சோதித்தல்

பதிலி அமைவாக்க உரையாடல், பயனர்கள் ஒரு மதிப்பை உள்ளிட்ட பிறகு ஒரு பதிலிக்கான இணைப்பை சோதிக்க பயன்படுகிறது.

பல உரிமைகளுக்கு சந்தாபெறு அல்லது சந்தாவிலகு

சந்தா நிர்வாகியில் இப்போது ஒரே சமயத்தில் பல உரிமைகளின் வரிசை எண்களைக் குறிப்பிடுவதன் மூலம் அவற்றுக்கு சந்தா பெற முடியும் (இணைத்தல்) அல்லது சந்தாவிலக முடியும் (நீக்குதல்).

GUI இல் செயல்படுத்தல் விசைகள் ஆதரவு

இப்போது சந்தா நிர்வாகியின் வரைவியல் பயனர் இடைமுகத்தில் நீங்கள் செயல்படுத்தல் விசையைப் பயன்படுத்தி ஒரு கணினியைப் பதிவு செய்ய முடியும். செயல்படுத்தல் விசைகளைக் கொண்டு பயனர்கள் கணினியைப் பதிவு செய்யும் முன்பு சந்தாக்களை முன் அமைவாக்கம் செய்ய முடியும்.

வெளிப்புற சேவையகங்களில் பதிவு செய்தல்

இப்போது சந்தா நிர்வாகியில், ஒரு கணினியைப் பதிவு செய்யும் போது ஒரு தொலைநிலை சேவையகத்தைத் தேர்ந்தெடுக்க ஆதரவுள்ளது. சந்தா நிர்வாகியின் இடைமுகத்தில் பதிவு செய்வதற்கான ஒரு URL ஐத் தேர்வு செய்வதற்கு ஒரு விருப்பம் உள்ளது, அத்துடன் பதிவு செய்யும் செயலின் போது முனைய எண், முன்னொட்டு ஆகியவற்றையும் வழங்க முடியும். கூடுதலாக, கட்டளை முனையத்தில் பதிவு செய்யும் போது, பதிவு செய்ய வேண்டிய சேவையகத்தைக் குறிப்பிட --serverurl விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, சந்தா நிர்வாக வழிகாட்டியின் கணினியைப் பதிவு செய்தல், பதிவுநீக்குதல் மற்றும் மறுபதிவு செய்தல் என்ற பிரிவைக் காணவும்.

GUI இல் பயன்படுதன்மை மாற்றங்கள்

வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் சந்தா நிர்வாகியின் GUI பல மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாடம் 8. மெய்நிகராக்கம்

8.1. KVM

virtio-SCSI

KVM மெய்நிகராக்க சேமிப்பக அடுக்கு virtio-SCSI (KVM க்கான SCSI அடிப்படையாகக் கொண்ட ஒரு சேமிப்பு கட்டமைப்பு) திறன்களைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது. Virtio-SCSI ஆனது SCSI LUNகளுக்கு நேரடியாக இணைக்கும் திறனை வழங்குகிறது, மேலும் virtio-blk உடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட அளவீட்டுத் தன்மையை வழங்குகிறது. தோராயமாக 25 சாதனங்கள் மற்றும் தீர்தல்கள் PCI ஸ்லாட்டுகளை மட்டுமே கையாளக்கூடிய virtio-blk உடன் ஒப்பிடுகையில் virtio-SCSI ஆனது நூற்றுக்கணக்கான சாதனங்களைக் கையாளக்கூடியது என்பதே அதன் தனிச்சிறப்பு நன்மையாகும்.
இப்போது Virtio-SCSI ஆனது பின்வரும் திறன்களுடன் இலக்கு சாதனத்தின் அம்சத் தொகுப்பைக் கொண்டுள்ளது:
  • virtio-scsi கன்ட்ரோலர் மூலமாக ஒரு மெய்நிகர் வன் இயக்கி அல்லது CD ஐ இணைக்கலாம்,
  • QEMU scsi-block சாதனத்தின் மூலமாக வழங்கியிலிருந்து விருந்தினருக்கு உண்மையான SCSI சாதனத்தை செலுத்தலாம்,
  • மேலும் virtio-blk இன் சுமார் 25 சாதனங்கள் என்னும் வரம்பிலிருந்து மேம்பட்ட அம்சமான ஒவ்வொரு விருந்தினருக்கும் நூற்றுக்கணக்கான சாதனங்களைப் பயன்படுத்த முடியும் என்ற நன்மை உள்ளது.
virtio-scsi ஆனது Red Hat Enterprise Linux 6.3 இல் ஒரு தொழில்நுட்ப மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் அது முழு ஆதரவுள்ள அம்சமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய virtio-win இயக்கிகளில் Windows விருந்தினர்களுக்கும் (Windows XP நீங்கலாக) ஆதரவுள்ளது.

Intel இன் அடுத்த தலைமுறை கோர் செயலிக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 இல் Intel இன் அடுத்த தலைமுறை கோர் செயலிக்கான qemu-kvm க்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் KVM விருந்தினர்கள் இந்த செயலிகள் வழங்கும் முழுமையான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும், அவற்றில் முக்கியமான அம்சங்கள்: மேம்பட்ட வெக்டார் நீட்டிப்புகள் 2 (AVX2), பிட்-கையாளுகை அறிவுறுத்தல்கள் 1 (BMI1), பிட்-கையாளுகை அறிவுறுத்தல்கள் 2 (BMI2), வன்பொருள் பூட்டு நீக்கம் (HLE), கட்டுப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை நினைவகம் (RTM), செயலாக்கம்-சூழல் அடையாளங்காட்டி (PCID), செல்லாததாக்கல் செயலாக்கம்-சூழல் அடையாளங்காட்டி (INVPCID), இணைந்த பெருக்கல்-கூட்டல் (FMA), பெரிய என்டியன் நகர்வு அறிவுறுத்தல்கள் (MOVBE), F சிக்மென்ட் மற்றும் G சிக்மென்ட் BASE அறிவுறுத்தல்கள் (FSGSBASE), சூப்பர்வைசர் பயன்முறை செயலாக்கத் தடுப்பு (SMEP), மேம்படுத்தப்பட்ட REP MOVSB/STOSB (ERMS).

AMD Opteron 4xxx வரிசை CPU க்கான ஆதரவு

AMD Opteron 4xxx வரிசை செயலி இப்போது qemu-kvm ஆல் ஆதரிக்கப்படுகிறது. இதனால் இந்த செயலி வரிசையின் புதிய அம்சங்களை KVM விருந்தினர்களுக்கும் கிடைக்கச் செய்ய முடிகிறது, எடுத்துக்காட்டு: F16C அறிவுறுத்தல் தொகுப்பு, பின்னமை பிட் கையாளுகை, பிட்-கையாளுகை அறிவுறுத்தல்கள் 1 (BMI1) தசமாக்கல் செயல்தொகுதிகள் மற்றும் இணைந்த பெருக்கல்-கூட்டல் (FMA) அறிவுறுத்தல் தொகுதி.

SPICE மூலமாக USB முன்னனுப்பலைப் பயன்படுத்தி விருந்தினர் நேரடி இடப்பெயர்ப்பு

Red Hat Enterprise Linux 6.4 இல், KVM ஆனது SPICE மூலமாகUSB முன்னனுப்பலைப் பயன்படுத்தி விருந்தினர்களை இடப்பெயர்ப்பதை ஆதரிக்கிறது, அதே சமயம் அமைவாக்கம் செய்யப்பட்ட அனைத்து சாதனங்களுக்கும் முன்பே உள்ள USB சாதன திருப்பிவிடல்களையும் பராமரிக்கிறது.

USB சாதனங்களைப் பயன்படுத்தி விருந்தினர்களின் நேரடி இடப்பெயர்ப்பு

Red Hat Enterprise Linux 6.4 இல், KVM ஆனது USB சாதனங்களைக் கொன்டு விருந்தினர்களின் இடப்பெயர்ப்பை செய்வதை ஆதரிக்கிறது. பின்வரும் சாதனங்கள் ஆதரிக்கப்படுகின்றன: மேம்படுத்தப்பட்ட வழங்கி கன்ட்ரோலர் இடைமுகம் (EHCI) மற்றும் ஒட்டுமொத்த வழங்கி கன்ட்ரோலர் இடைமுகம் (UHCI) அக செலுத்தல் மற்றும் சேமிப்பு சாதனங்கள், மைஸ், விசைப்பலைகள், ஹப்கள் மற்றும் பிற சாதனங்களைப் போன்ற ஆக்கம் பெற்ற சாதனங்கள்.

QEMU விருந்தினர் ஏஜன்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளது

QEMU விருந்தினர் ஏஜன்ட்டானது (qemu-guest-agent தொகுப்பால் வழங்கப்படுவது) இப்போது Red Hat Enterprise Linux 6.4 இல் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. அது இப்போது பின்வரும் முக்கிய மேம்படுத்தல்கள் மற்றும் வழுநீக்கல்களுடன் பிரதான பகுதியின் பதிப்பு 1.1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது:
  • இப்போது Windows கணினியில் உள்ள RAM அல்லது வட்டுக்கு இடைநீக்கம் செய்ய guest-suspend-disk மற்றும் guest-suspend-ram கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.
  • இப்போது Linux இல் பிணைய இடைமுக தகவலைப் பெற guest-network-get-interfaces கட்டளையைப் பயன்படுத்தலாம்.
  • இந்தப் புதுப்பிப்புடன் கோப்புமுறைமை செயலிழப்பு ஆதரவு மேம்பாடுகளும் தீர்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த புதுப்பிப்பில் பல ஆவணமாக்க திருத்தங்களும் சில மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இணைமெய்நிகராக்கம் செய்யப்பட்ட குறுக்கீட்டு முடிவு காட்டுதல் (PV-EOI)

Red Hat Enterprise Linux 6.3 மற்றும் முந்தைய பதிப்பை இயக்கும் வழங்கிகள் மற்றும் விருந்தினர்களுக்கு ஒவ்வொரு குறுக்கீட்டுக்கும் VM வெளியேற்றங்கள் (context switches from a VM to a Hypervisor) தேவை: குறுக்கீட்டை உட்செலுத்த ஒன்று, குறுக்கீடு முடிந்ததைக் குறிக்கும் சமிக்ஞைக்கு ஒன்று. வழங்கி மற்றும் விருந்தினர் ஆகிய இரு கணினிகளும் Red Hat Enterprise Linux 6.4 அல்லது சமீபத்திய பதிப்புக்கு பதிப்பேற்றப்பட்டால், அவை இணை மெயநிகராக்கம் செய்யப்பட்ட குறுக்கீட்டு முடிவு வசதியைப் பயன்படுத்தி ஒரு குறுக்கீட்டுக்கு ஒரு மாற்றம் மட்டுமே கொண்டு செயல்பட முடியும். இதனால், வழங்கி மற்றும் விருந்தினர் ஆகிய இரு கணினிகளிலும் Red Hat Enterprise Linux 6.4 அல்லது சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தும் போது, virtio பிணைய சாதனத்தில் உள்ள உள்வரும் பிணைய போக்குவரத்து போன்ற குறுக்கீடு அதிகமான பணிச்சுமைகளுக்கான வெளியேற்றங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படுகிறது. இதனால் இத்தகைய பணிச்சுமைகளுக்கான CPU பயனீட்டளவு குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்படுகிறது. விளிம்பு வெளியேற்றங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்: எடுத்துக்காட்டுக்கு e1000 ஆனது மட்ட குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது, அது மேம்படுத்தப்படவில்லை.

அமைவாக்கம் செய்யத்தக்க ஒலி செலுத்தல்

இப்போது விருந்தினர் கணினியில் உள்ள ஒரு ஒலி சாதனத்தை (லைன்-இன் மற்றும் லைன்-அவுட் என கண்டறிவதுடன் மட்டுமின்றி கூடுதலாக) மைக்ரோஃபோன் அல்லது ஒலிப்பான் என்றும் கண்டறிய முடியும். இப்போது குரல் பதிவு மற்றும் ஒலிக்கு குறிப்பிட்ட வகை உள்ளீடுகளை மட்டுமே ஏற்கும் விருந்தினர் பயன்பாடுகளிலும் ஒலி சாதனங்கள் சரியாக வேலை செய்யும்.

8.2. ஹைப்பர்-V

Microsoft Hyper-V இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன, அத்துடன் அவற்றுக்கான விருந்தினர் நிறுவல் ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைக்கப்பட்ட Red Hat Enterprise Linux விருந்தினர் நிறுவல் மற்றும் Microsoft Hyper-V இலான Red Hat Enterprise Linux 6.4 க்கான Hyper-V இணைமெய்நிகராக்கம் செய்யப்பட்ட சாதன ஆதரவு, பயனர் Red Hat Enterprise Linux 6.4 ஐ Microsoft Hyper-V ஹைப்பர்வைசர்களின் மேல் விருந்தினராக இயக்க அனுமதிக்கிறது. Red Hat Enterprise Linux 6.4 உடன் வழங்கப்படும் கெர்னலில் பின்வரும் Hyper-V இயக்கிகள் மற்றும் ஒரு கடிகார மூலம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன:
  • ஒரு பிணைய இயக்கி (hv_netvsc)
  • ஒரு சேமிப்பக இயக்கி (hv_storvsc)
  • ஒரு HID-நிரப்பு மவுஸ் இயக்கி (hid_hyperv)
  • ஒரு VMbus இயக்கி (hv_vmbus)
  • ஒரு util இயக்கி (hv_util)
  • ஒரு IDE வட்டு இயக்கி (ata_piix)
  • ஒரு கடிகார மூலம் (i386, AMD64/Intel 64: hyperv_clocksource)
Red Hat Enterprise Linux 6.4 இல் ஒரு கடிகார மூலமாக ஹைப்பர்-V க்கான ஆதரவும், விருந்தினர் IP, FQDN, OS பெயர் மற்றும் OS வெளியீட்டு எண் போன்ற அடிப்படை தகவல்களை VMbus மூலம் வழங்கிக்கு அனுப்புகின்ற விருந்தினர் ஹைப்பர்-V விசை-மதிப்பு இணை (KVP) டெமானும் (hypervkvpd) சேர்க்கப்பட்டுள்ளது.

8.3. VMware ESX

VMware PV இயக்கிகள்

VMware ESX இல் Red Hat Enterprise Linux 6.4 ஐ இயக்கும் போது, குறையற்ற சிறப்பான அனுபவத்தை வழங்கும் விதத்தில் VMware இணை மெய்நிகராக்கம் செய்யப்பட்ட இயக்கிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. Anaconda நிறுவியும் நிறுவல் செயலாக்கத்தின் போது இயக்கிகளின் பட்டியலைக் காண்பிக்கும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இயக்கிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன:
  • ஒரு பிணைய இயக்கி (vmxnet3)
  • ஒரு சேமிப்பக இயக்கி (vmw_pvscsi)
  • ஒரு நினைவக ஊதி இயக்கி (vmware_balloon)
  • ஒரு மவுஸ் இயக்கி (vmmouse_drv)
  • ஒரு வீடியோ இயக்கி (vmware_drv)

பாடம் 9. க்ளஸ்டரிங்

IBM iPDU ஃபென்ஸ் சாதனத்திற்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 இல் IBM iPDU ஃபென்ஸ் சாதனத்திற்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஃபென்ஸ் சாதனத்தின் அளவுருக்கள் பற்றிய மேலும் தகவலுக்கு, Red Hat Enterprise Linux 6 க்ளஸ்டர் நிர்வாக வழிகாட்டியின் Fence Device Parameters பின்னிணைப்பைப் பார்க்கவும்.

Eaton பிணைய பவர் கன்ட்ரோலர் ஃபென்ஸ் சாதனத்திற்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 இல் SNMP நெட்வொர்க் பவர் ஸ்விட்ச்சிலான Eaton ஆன fence_eaton_snmp க்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஃபென்ஸ் ஏஜன்ட்டின் அளவுருக்கள் பற்றி மேலும் தகவலறிய, Red Hat Enterprise Linux 6 க்ளஸ்டர் நிர்வாக வழிகாட்டியின் ஃபென்ஸ் சாதன அளவுருக்கள் பின்னிணைப்பைப் பார்க்கவும் .

புதிய keepalived தொகுப்பு

Red Hat Enterprise Linux 6.4 இல் தொழில்நுட்ப மாதிரியாக keepalived தொகுப்பானது சேர்க்கப்பட்டுள்ளது. keepalived தொகுப்பானதுசுமை கையாளுகை மற்றும் அதிக கிடைக்கும் தன்மை ஆகிய வகைக்கான எளிய மற்றும் உறுதியான வசதிகளை வழங்குகிறது. சுமை கையாளுகை கட்டமைப்பானது அடுக்கு 4 பிணைய சுமை கையாளுகை வசதியை வழங்குகின்ற பிரபலமான மற்றும் பரவலான பயன்பாட்டிலுள்ள Linux மெய்நிகர் சேவையக கெர்னல் தொகுதிக்கூறை சார்ந்துள்ளது. keepalived டெமான் சுமை சமநிலையாக்கப்பட்ட சேவையக தொகுப்பகங்களின் நிலைக்கேற்ப அவற்றுக்கு ஆரோக்கிய சோதனை அமைப்புகளை அமைக்கிறது. keepalived டெமான் மெய்நிகர் ரௌட்டர் தயக்க நெறிமுறையையும் (VRRP) செயல்படுத்துகிறது, இதனால் ரௌட்டர் அல்லது டைரக்ட்டர் ஃபெயிலோவர் அதிக கிடைக்கும் தன்மை கொண்டதாக அமைகிறது.

Watchdog மீட்பு

Red Hat Enterprise Linux 6.4 இல் தொழில்நுட்ப மாதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள புதிய fence_sanlock மற்றும் checkquorum.wdmd ஃபென்ஸ் ஏஜன்ட்டுகள், watchdog சாதனத்தின் மூலம் ஒரு கனுவைத் தூண்டுவதற்கும் மீட்பதற்குமான புதிய இயங்கம்சத்தை வழங்குகின்றன. இந்த தொழில்நுட்ப மாதிரிகளை செயல்படுத்துவது பற்றிய வழிமுறைப் பயிற்சிகள் https://fedorahosted.org/cluster/wiki/HomePage என்ற இணைப்பில் கிடைக்கும்.

VMDK-அடிப்படையிலான சேமிப்பகத்திற்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 இல் மல்டி ரைட்டர் விருப்பத்தைக் கொண்டு VMware இன் VMDK (மெய்நிகர் கணினி வட்டு) வட்டு பிம்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் க்ளஸ்டர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் எடுத்துக்காட்டாக GFS2 போன்ற க்ளஸ்டர் கோப்புமுறைமைகளுக்கு மல்டி ரைட்டர் விருப்பத்தைக் கொண்டு VMDK-அடிப்படையிலான சேமிப்பகத்தை பயன்படுத்த முடியும்.

பாடம் 10. சேமிப்பகம்

இணை NFS முழுமையாக ஆதரிக்கப்படுகிறது

இணை NFS (pNFS) என்பது NFS v4.1 தரநிலையின் ஒரு பகுதியாகும், இது கிளையன்ட்டுகள் நேரடியாகவும் இணைமுறையிலும் அணுக அனுமதிக்கிறது. pNFS கட்டமைப்பானது பல பொது பணிச்சுமைகளுக்கான NFS சேவைகளின் அளவீட்டுத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவும். Red Hat Enterprise Linux 6.4 இல், pNFS முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.
pNFS ஆனது 3 வெவ்வேறு சேமிப்பக நெறிமுறைகள் அல்லது தளவமைப்புகளை ஆதரிக்கிறது: கோப்புகள், பொருள்கள் மற்றும் தொகுப்புகள். Red Hat Enterprise Linux 6.4 NFS கிளையன்ட் கோப்புகள் தளவமைப்பு நெறிமுறையை ஆதரிக்கிறது.
இந்த புதிய செயலம்சத்தை செயல்படுத்த ஒரு pNFS-செயலாக்கப்பட்ட சேவையகத்திலிருந்தான மவுன்ட்டுகளில் பின்வரும் மவுன்ட் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்: -o minorversion=1 அல்லது -o v4.1.
சேவையகமானது pNFS-செயலாக்கப்பட்டதாக இருந்தால், nfs_layout_nfsv41_files கெர்னல் தொகுதிக்கூறானது முதல் மவுன்ட்டிலேயே தானாக ஏற்றப்படுகிறது. இந்த தொகுதிக்கூறு ஏற்றப்பட்டுள்ளதா என சரிபார்க்க பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தவும்:
~]$ lsmod | grep nfs_layout_nfsv41_files
pNFS குறித்த கூடுதல் தகவலுக்கு, http://www.pnfs.com/ ஐப் பார்க்கவும்.

XFS ஆன்லைன் அப்புறப்படுத்தல் ஆதரவு

மவுன்ட் செய்யப்பட்ட கோப்பு முறைமைகளில் செய்யப்படும் ஆன்லைன் அப்புறப்படுத்தல் செயல்பாடானது கோப்பு முறைமை பயன்படுத்தாத தொகுப்புகளை அப்புறப்படுத்தும். இப்போது XFS கோப்பு முறைமைகளில் ஆன்லைன் அப்புறப்படுத்தல் செயல்பாடுகள் ஆதரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு Red Hat Enterprise Linux 6 சேமிப்பக நிர்வாக வழிகாட்டியின் பயன்படுத்தாத தொகுப்புகளை அப்புறப்படுத்துதல் என்னும் பிரிவைப் பார்க்கவும்.

Micron PCIe SSD க்கான LVM ஆதரவு

Red Hat Enterprise Linux 6.4 இல், LVM இல் Micron PCIe சாலிட் ஸ்டேட் இயக்கிகளுக்கான (SSDகள்) சாதனங்களாக ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, அவை ஒன்றிணைந்து பிரிவக குழுவின் ஒரு பகுதியை உருவாக்கக்கூடும்.

2-way Mirror RAID10 க்கான LVM ஆதரவு

இப்போது LVM கொண்டு RAID10 தருக்க பிரிவக தொகுதிகளை உருவாக்கவும், நீக்கவும், மறுஅளவு செய்யவும் முடியும். ஒரு RAID10 தருக்க பிரிவகத்தை உருவாக்க, மற்ற RAID வகைகளைப் போலவே, பின்வருமாறு சிக்மென்ட் வகையைக் குறிப்பிடவும்:
~]# lvcreate --type raid10 -m 1 -i 2 -L 1G -n lv vg
-m மற்றும் -i மதிப்புருக்கள் மற்ற சிக்மென்ட்டுகளுக்கு செயல்படுவதைப் போன்றே செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது, -i என்பது மொத்த பட்டைகளின் எண்ணிக்கை, -m என்பது (கூடுதல்) நகல்களின் எண்ணிக்கை (அதாவது, -m 1 -i 2 ஆனது 2-வே மிரர்களில் 2 பட்டைகளைக் கொடுக்கும்).

சாதன மேப்பர் சாதனங்களின் மூலம் SCSI நிலையான ஒதுக்கீடுகளை அமைத்து நிர்வகிக்கலாம்

முன்பு, பல பாதை சாதனங்களில் நிலையான ஒதுக்கீடுகளை அமைக்க, பாதை சாதனங்கள் அனைத்திலும் அதை அமைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாதை சாதனம் சேர்க்கப்பட்டால், அந்தப் பாதைக்கான ஒதுக்கீடுகளை கைமுறையாக சேர்க்க வேண்டியது அவசியமாக இருந்தது. Red Hat Enterprise Linux 6.4 இல் mpathpersist கட்டளையைப் பயன்படுத்தி SCSI நிலையான ஒதுக்கீடுகளை சாதன மேப்பர் சாதனங்களை அமைத்து நிர்வகிக்கலாம். பாதை சாதனங்கள் சேர்க்கப்படும் போது, அந்த சாதனங்களிலும் நிலையான ஒதுக்கீடுகள் அமைக்கப்படும்.

பாடம் 11. கம்பைலர் மற்றும் கருவிகள்

SystemTap பதிப்பு 1.8 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது

SystemTap என்பது ஒரு தடமறியும் மற்றும் ஆய்ந்தறியும் கருவியாகும், அதைக் கொண்டு பயனர் இயக்க முறைமையின் (குறிப்பாக கெர்னல்) செயல்பாடுகளை தெளிவாக கண்காணிக்கலாம். அது netstat, ps, top மற்றும் iostat; ஆகிய கருவிகளின் வெளியீட்டைப் போன்றதேயான முடிவுகளை வழங்கும், இருப்பினும் SystemTap இல் சேகரிக்கப்பட்ட தகவல்களில் கூடுதல் வடித்தல் மற்றும் பகுப்பாய்வுக்கான விருப்பங்கள் உள்ளன.
Red Hat Enterprise Linux 6.4 இல் உள்ள systemtap தொகுப்பானது பிரதான பகுதி பதிப்பு 1.8 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதில் பல வழுநீக்கல்களும் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன:
  • இப்போது @var தொடரியலானது uprobe மற்றும் kprobe ஹேன்டிலர்களிலுள்ள (செயலாக்கம், கெர்னல், தொகுதிக்கூறு) DWARF மாறிகளை அணுகுவதற்கான மாற்று மொழித் தொடரியலாகும்.
  • இப்போது SystemTap டேப்செட்டுகளால் சேர்க்கப்பட்ட C மேற்குறிப்புகளுடனான மோதலைத் தவிர்ப்பதற்காக உள் மாறிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • SystemTap கம்பைல்-சேவையகம் மற்றும் கிளையன்ட் ஆகியவை இப்போது IPv6 பிணையங்களை ஆதரிக்கும்.
  • இப்போது SystemTap இயக்க நேரமானது (staprun) ஸ்கிரிப்ட்டுகளில் இருந்து கிடைக்கும் குறைந்த த்ரூபுட் வெளியீட்டுக்கான குறைந்த நிகழ்வெண் கொண்ட போலுக்கான எழுதலை அனுமதிப்பதற்காக-T நேரக்கடப்பு விருப்பத்தை ஏற்கும்.
  • இப்போது SystemTap ஸ்கிரிப்ட் ட்ரேன்ஸ்லேட்டர் இயக்கி (stap) பின்வரும் வள வரம்பு விருப்பங்களை வழங்குகிறது:
    --rlimit-as=NUM
    --rlimit-cpu=NUM
    --rlimit-nproc=NUM
    --rlimit-stack=NUM
    --rlimit-fsize=NUM
    
  • SystemTap தொகுதிக்கூறுகள் இப்போது சிறியவையாக உள்ளதால் கம்பைலிங் செயலும் வேகமாக நிகழும். தொகுதிக்கூறுகளின் வழுநீக்கல் தகவல் இப்போது முன்னிருப்பாக மறைக்கப்பட்டிருக்கும்.
  • வழு CVE-2012-0875 (தவறாக வடிவமைக்கப்பட்ட DWARF அன்வைன்ட் தரவைச் செயலாக்கும் போது கெர்னல் குழம்புகிறது) இப்போது திருத்தப்பட்டது.

lscpu மற்றும் chcpu பயன்பாடுகள்

கிடைக்கக்கூடிய CPUகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் காண்பிக்கின்ற lscpu பயன்பாடானது, பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் chcpu எனும் ஒரு புதிய பயன்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, இது நீங்கள் CPU நிலையை (ஆன்லைன்/ஆஃப்லைன் ஸ்டேன்ட்பை/செயலில் மற்றும் பிற நிலைகள்) மாற்றவும் CPUகளை செயல்படுத்த மற்றும் முடக்கவும் குறிப்பிட்ட CPUகளை அமைவாக்கம் செய்யவும் அனுமதிக்கிறது.
இந்த பயன்பாடுகள் பற்றி மேலும் தகவலறிய, lscpu(1) மற்றும் chcpu(8) உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்.

பாடம் 12. பொதுவான புதுப்பிப்புகள்

புதுப்பிக்கப்பட்ட samba தொகுப்புகள்

Red Hat Enterprise Linux 6.4 இல் மறுஅடிப்படையாக்கிய samba தொகுப்புகள் உள்ளன, அவற்றில் பல வழுநீக்கல்களும் சில மேம்படுத்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதில் SMB2 நெறிமுறைக்காக சேர்க்கப்பட்டுள்ள ஆதரவு என்பது முக்கியமானதாகும். /etc/samba/smb.conf கோப்பின் [global] பிரிவில் உள்ள பின்வரும் அளவுருவைக் கொண்டு இந்த SMB2 ஆதரவைச் செயல்படுத்தலாம்:
max protocol = SMB2
கூடுதலாக, இப்போது Samba AES கெர்பரோஸ் குறியாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. Windows Vista மற்றும் Windows Server 2008 வெளியீட்டிலிருந்து Microsoft Windows இயக்க முறைமைகளுக்கான AES ஆதரவு கிடைத்துவருகிறது. Windows 7 வெளியீட்டிலிருந்து இதுவே [உதிய முன்னிருப்பு கெர்பரோஸ் குறியாக்க வகையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இப்போது Samba வில் அது கட்டுப்படுத்தும் விசைதத்தலில் AES கெர்பரோஸ் விசைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது samba விசை தத்தலைப் பயன்படுத்துகின்ற மற்றும் அதே கணினியில் இயங்கும் மற்ற கெர்பொராக்கம் செய்யப்பட்ட சேவைகள் AES குறியாக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். AES அமர்வு விசைகளைப் பயன்படுத்த (AES குறியாக்கம் செய்யப்பட்ட டிக்கட் வழங்கும் டிக்கட்டுகளை பயன்படுத்துவது மட்டுமல்ல), செயல்மிகு கோப்பகத்தின் LDAP சேவையகத்திலுள்ள samba கணினி கணக்கை கைமுறையாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு Microsoft Open Specifications Support Team Blog ஐப் பார்க்கவும்.

எச்சரிக்கை

புதுப்பிக்கப்பட்ட samba தொகுப்புகள் ID மேப்பிங் அமைவாக்கம் செய்யப்பட்டுள்ள விதத்தையும் மாற்றுகின்றன. முன்பே உள்ள Samba அமைவாக்க கோப்புகளை மாற்றியமைக்குமாறு பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பல எளிய தரவுத்தள (TDB) கோப்புகள் புதுப்பிக்கப்பட்டு, உண்மையான பதிவக செயல்படுத்தலைப் பயன்படுத்தும் வகையில் அச்சிடல் ஆதரவும் மீட்டெழுதப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் smbd இன் புதிய பதிப்பைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் அனைத்து TDB கோப்புகளும் புதுப்பிக்கப்படும். உங்களிடம் TDB கோப்புகளின் மறுபிரதியில்லாமல் நீங்கள் பழைய Samba 3.x பதிப்புக்கு பதிப்பிறக்கம் செய்ய முடியாது.
இந்த மாற்றங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு, Samba 3.6.0 க்கான வெளியீட்டுக் குறிப்புகளைப் பார்க்கவும்.

புதிய SciPy தொகுப்பு

Red Hat Enterprise Linux 6.4 இல் புதிய scipy தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. SciPy தொகுப்பானது கணிதவியல், அறிவியல் மற்றும் பொறியியலுக்கான மென்பொருளை வழங்குகிறது. எழுந்தமானமான பதிவுகளின் பெரிய பல பரிமாண அணிவரிசைகளைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட NumPy தொகுப்பே SciPy க்கான பிரதான தரவகமாகும். SciPy தரவகமானது NumPy அணிகளுடன் செயல்பட்டு பல்வேறு சிறப்பான எண்ணியல் ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பாக்கலை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக எண்ணியல் ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பாக்கலின் செயல் முறைகளைக் கூறலாம்.

NSS இல் TLS v1.1 ஆதரவு

nss மற்றும் nss-util தொகுப்புகள் பிரதான பகுதி பதிப்பு 3.14 க்கு புதுப்பிக்கப்பட்டு, TLS பதிப்பு 1.1 க்கான ஆதரவுடன் மற்ற பல அம்சங்களையும் வழங்குகிறது. அத்துடன் nspr தொகுப்பானது பதிப்பு 4.9.2 க்கு மறுஅடிப்படையாக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு NSS 3.14 வெளியீட்டுக் குறிப்புகளைப் பார்க்கவும்.

உட்பொதித்த Valgrind gdbserver

valgrind தொகுப்பானது பிரதான பகுதி பதிப்பு 3.8.1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பில், பல புதிய மேம்பாடுகள் மற்றும் வழுநீக்கல்களுடன் ஒரு உட்பொதித்த gdbserver கொண்டுள்ளது. மேலும் தகவலுக்கு Red Hat உருவாக்குநர் கருவித்தொகுப்பு 1.1 பயனர் வழிகாட்டியில் உள்ள Valgrind பிரிவையும் Valgrind 3.8.1 இல் உள்ள மாற்றங்கள் என்ற பின்னிணைப்பையும் பார்க்கவும்.

புதிய libjpeg-turbo தொகுப்புகள்

Red Hat Enterprise Linux 6.4 இல் பின்வரும் புதிய தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன: libjpeg-turbo. இந்த தொகுப்புகள் வழக்கமான libjpeg தொகுப்புகளுக்கு பதிலாக இடம்பெற்றுள்ளன, மேலும் இவை libjpeg ஐப் போன்ற அதே செயலம்சத்தையும் API ஐயும் வழங்கும் அதே சமயம் சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளன.

புதிய redhat-lsb-core தொகுப்பு

redhat-lsb தொகுப்பை நிறுவும் போது, LSB தரநிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல சார்புத் தொகுப்புகள் கணினிக்கு இழுத்துவரப்படுகின்றன. Red Hat Enterprise Linux 6.4 ஆனது ஒரு புதிய redhat-lsb-core துணை தொகுப்பை வழங்குகிறது, அது redhat-lsb-core தொகுப்பை நிறுவுவதன் மூலம் குறைந்தபட்ச தெவையான சார்புத் தொகுப்புகளை மட்டுமே பெற உதவுகிறது.

createrepo பயன்பாடு புதுப்பிக்கப்பட்டுள்ளது

createrepo பயன்பாடு சமீபத்திய பிரதான பகுதிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது குறிப்பிடத்தக்க அளவு நினைவகப் பயனீட்டளவைக் குறைத்து --workers விருப்பத்தின் மூலம் பல பணி ஆதரவைச் சேர்க்கிறது.

மறுபார்வை வரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1.2-0Thu Feb 21 2013மார்ட்டின் பிர்பிக்
Release of the Red Hat Enterprise Linux 6.4 Release Notes.